நடிகர் நாக சைதன்யாவின் வருங்கால மனைவி யார் தெரியுமா? பலரும் அறிந்திடாத தகவல்

0
383
- Advertisement -

நடிகர் நாக சைதன்யாவின் வருங்கால மனைவியை குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இதனிடையே நாக சைதன்யா- சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரம் தெரியவில்லை. இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது.

- Advertisement -

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா காதல்:

இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த ஒரு விளக்கமோ கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நேற்று நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதோடு இந்த நாள் தான் நாகச் சைதன்யா மற்றும் சமந்தா தங்களது காதலை தெரிவித்துக் கொண்ட நாளாம். அதற்காக, இதே நாளில் சோபித்தாவுடன நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று நாக சைதன்யா விரும்பி இருந்தாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி இருந்தது.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்:

தற்போது சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது. கூடிய விரைவிலேயே இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நாக சைதன்யா வருங்கால மனைவி சோபிதா குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 32 வயதாகிறது. இவர் 2013 ஆம் ஆண்டு Femina Miss India Earth என்ற அழகி போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றிருந்தார்.

-விளம்பரம்-

சோபிதா துலிபாலா குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் இவர் பரதநாட்டியம், குச்சிபுடி போன்ற பாரம்பரிய கலைகளையும் கற்று இருக்கிறார். அதற்குப் பின் இவர் பாலிவுட்டில் அனுரா காஷ்யப் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த ராமன் ராவ் 2.0 என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் இருக்கும் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகுதான் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது பொன்னியின் செல்வன் படம் தான்.

சோபிதா துலிபாலா திரைப்பயணம்:

இது கடந்த ஆண்டு மனிரத்தினம் இயக்கத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் இவர் அருள்மொழிவர்மனின் காதலியாக வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய சின்ன சின்ன முக பாவனைகள், நடிப்பு, நடனம் எல்லாமே சிறப்பாக இருந்தது. அதோடு இவர் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். தற்போது இவர் படங்கள், வெப்சீரிஸ் என்று பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement