தெலுங்கு சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீலீலா. இவர் அமெரிக்காவில் பிறந்தார். ஆனால், வளர்ந்ததெல்லாம் பெங்களூரில் தான். இவர் மருத்துவம் படித்து இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்து சினிமாவின் மீது அதிக ஆர்வம் என்பதால் நடிக்க வந்து விட்டார். இவர் 2019 ஆம் ஆண்டு கன்னட மொழி படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். இருந்தாலும், இவர் தெலுங்கில் தான் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் மகேஷ்பாபு, பவன் கல்யாண், நந்தமுரி பாலகிருஷ்ணா, விஜய் தேவர்கொண்டா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தமிழிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில் ஸ்ரீலீலா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஸ்ரீலீலா குறித்த தகவல்:
அந்த வகையில் தற்போது ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் உஸ்தாத் பகத் சிங். இதில் பவன் கல்யாண் நடித்திருக்கிறார். இந்த படம் உகாதி பண்டிகை முன்னிட்டு கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராசி கண்ணாவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பார்த்திபன் தான் வில்லன் ரோலில் மிரட்டி இருக்கிறார்.

ஸ்ரீலீலா பேட்டி:
தமன் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீலிலா, நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது சோசியல் மீடியாவில் நிறைய நெகட்டிவ் கமண்டுகளும் ட்ரோல்களும் வருகிறது. ஆரம்பத்தில் அது என்னை ரொம்பவே மனதளவில் பாதித்தது. பலமுறை அதை நினைத்து நான் கண்ணீர் எல்லாம் விட்டு அழுதிருக்கிறேன். ஒரு கட்டத்தில் நமக்கு இந்த சினிமா வேண்டாம்.

விமர்சனம் பற்றி சொன்னது:
மீண்டும் கல்லூரிக்கு சென்று படிப்பை தொடரலாம் என்று கூட நினைத்து இருக்கிறேன். தற்போது நான் அதிலிருந்து மீண்டு வந்து என்னுடைய வளர்ச்சியில் மட்டுமே கவனத்தை செயல் செயல்பட்டு வருகிறேன். இப்போது பாராட்டையும் விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக் கொண்டேன். தேவையானதை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். தேவையற்றதை புறக்கணித்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.






