மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு ! நடிகை யார் தெரியுமா

0
1332

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் இழப்பு குறித்து இன்னும் பேசி தான் வருகிறார்கள். இவர் இந்திய சினிமாவில் நடித்த படங்கள் அனைத்தும் இன்னும் எத்தனை வருடங்களானாலும் நிலைத்து நிற்கும் அளவிற்கு ஒரு சிறந்த நடிகராக நடித்துவிட்டு சென்றார்.

sridevi-

- Advertisement -

மறைந்த நடிகர் நடிகைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களது அவர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகங்களாக வெளியிட்டும் அல்லது படங்களாகவும்

வெளியிடபட்டுள்ளது.அப்படி எடுக்கப்படும் படங்களில் நாம் அவர்களை பற்றி அறிந்திடாத பல தகவலகள் அந்த படங்களில் காண்பிக்கப்பட்டிருக்கும்.அதுபோன்று தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வெளியிட முடிவுசெய்திருக்கிறார்கள்.பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஹன்சால் மேத்தா என்பவர் ஸ்ரீதேவியின் கடந்த கால வாழ்க்கை ,அவரது சினிமா பயணம் போன்ற அனைத்தையும் பற்றி படம் ஒன்றை எடுக்க முடிவுசெய்துள்ளார்.

-விளம்பரம்-

vidya-balan

ஏற்கன்வே மறைந்த நடிகை சிலுக் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருந்தனர். அதில் நடித்த பாலிவுட் நடிகை வித்யாபாலன் அந்த படத்திற்காக தேசிய பிலிம் விருதும் கிடைத்தது.மேலும் இந்த படத்திலும் அவரே நடிக்கவுள்ளார்.

தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்போவதால் அவரின் மரணத்தில் இருந்த சில மர்மங்கள் தெரிய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கிவிருக்கிறது. ஆனால் இன்னும் இதில் ஹீரோ யார் என்று தெரியவில்லை.

Advertisement