தமிழ் சினிமாவை பொறுத்த வரை தற்போது டாப் நடிகைகளாக திகழ்ந்து வரும் நடிகைகள் கூட ஆரம்பத்தில் கவர்ச்சியான வேடங்களில் நடித்தவர்கள் தான். அவ்வளவு ஏன் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து வரும் நயன்தாரா கூட ஆரம்பத்தில் லிப் லாக் காட்சிகளிளும் பிகினி உடைகளிலும் நடித்தவர் தான். ஆனால், ஸ்ரீதிவ்யா போன்ற குடும்பபாங்கான நடிகை கூட ஆரம்பத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார் என்பது தான் வியப்பான ஒன்று.
ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதிவ்யா அவர்கள் மூன்று வயதிலேயே தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சொல்லலாம். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டு தான் இவர் ‘மனசார’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் பென்சில், ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது என பல படங்களில் நடித்துள்ளார். மேலும்,2013 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் ஸ்ரீதிவ்யா.அதன் பின்னர் ஜீவா, விஷ்ணு விஷால் என்று பல்வேறு இளம் நடிகருடன் நடித்துவிட்டார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா ஆரம்ப காலத்தில் நடத்திய போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோ ஷூட்டில் உள்ளாடை தெரியும்படி படு கவர்ச்சியான போஸை கொடுத்துள்ளார் ஸ்ரீதிவ்யா. இதை பார்க்கும் போது தற்போது குடும்ப குத்துவிளக்காக இருக்கும் நடிகையா இப்படி எல்லாம் போஸ் கொடுத்து இருக்கிறார் என்ற வியப்பு ஏற்படுகிறது.