சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்த்த எத்தனையோ நடிகைகள் காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த வகையில் அந்த லிஸ்டில் மிக அருகில் இருப்பவர் நடிகைஸ்ரீதிவ்யாவும் ஒருவர். தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதிவ்யா அவர்கள் மூன்று வயதிலேயே தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சொல்லலாம். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டு தான் இவர் ‘மனசார’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் பென்சில், ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது என பல படங்களில் நடித்துள்ளார். மேலும்,2013 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் என்பவர் இயக்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.
இதையும் பாருங்க :அந்த பழக்கம் தான் இப்போது உதவியா இருக்கு. நடிகை சாய் பல்லவியின் சீக்ரெட்.
அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தார் என்று கூட சொல்லலாம். தற்போது கூட ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் எங்கு ஒலித்தாலும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஸ்ரீதிவ்யா தான் அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஸ்ரீதிவ்யாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் சரியாக அமையாத நிலையில் அவரது சகோதரி ஸ்ரீரம்யா நடித்த ‘யமுனா ‘ என்ற படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
ஆம், இந்த படத்தில் நடித்துள்ளது ஸ்ரீதிவ்யாவின் சொந்த சகோதரி தான். இவர் நடித்த இந்த திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. மேலும், இவர் எங்கேயும் எப்போதும் படத்தில் அனன்யாவின் சகோதரியாகும் நடித்துள்ளார். ஸ்ரீதிவ்யா படங்களில் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்த நிலையில் அவரின் சகோதரி இப்படி கவர்ச்சியாக நடித்துள்ளதை கண்டு ரசிகர்கள் அக்காவையே கவர்ச்சியில் மிஞ்சிடீங்களே என்று புலம்பி வருகின்றனர்.