லாரன்ஸ் அளவிற்கு எல்லாம் விஜய் வர முடியாது..!நடிகை ஸ்ரீரெட்டி நேரடி தாக்குதல்..!

0
1207
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். அதில் நடிகர் லாரன்ஸ் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் லாரன்ஸை சந்தித்துள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் , நான் லாரன்ஸ் அவர்களை நல்ல முறையில் அவரது வீட்டில் சந்தித்தேன். மேலும், அவர் எனக்கு ஆடிஷனை வைத்து அடுத்து படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்தார்.

- Advertisement -

இந்நிலையில் நக்கீரன்  பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஸ்ரீரெட்டியிடம், உங்களுக்கு வாய்ப்பு தருதாக கூறி உங்களுடன் உடல் உறவு கொண்டவர்கள் உங்களது விருப்பத்துடன் தானே செய்தார்கள் அப்படி இருக்க எதற்கு அனைவரையும் குறை கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி, நான் லாரன்ஸை பற்றி நான் நல்லதும் சொல்லவில்லை கேட்டதும் சொல்லவில்லை. அவராவது தனது தப்பை உணர்ந்து எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அவர் எத்தனையோ ஏழை மக்களுக்கு நல்லது செய்கிறார். பல குழந்தைகளுக்கு உணவு அளித்து வருகிறார். அது அனைத்தும் பாராட்டக் கூடிய விடயம் தான்.

-விளம்பரம்-

ஆனால், இந்த துறையில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கும் முருகதாஸ், சுந்தர் சி , விஜய் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் லாரன்ஸின் அருகில் கூட வர முடியாது. என்னை பொறுத்தவரை லாரன்ஸ் தான் உண்மையான ஹீரோ என்று கூறியுள்ளார். 

நடிகை ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ள சுந்தர் சி, முருகதாஸ் இருவருமே ஸ்ரீரெட்டியின் பாலியல் தொல்லை லிஸ்டில் உள்ளவர்கள் என்பது ஏற்கனவே அறிந்த விடயம் தான்.ஆனால், சம்மந்தமே இல்லாமல் விஜய்யை எதற்காக இழுத்தார் என்பது தான் விஜய் ரசிகர்களின் கோபமாக மாறியுள்ளது.   

Advertisement