ஸ்ரீ ரெட்டிக்கு ரொம்ப பிடித்த தமிழ் நடிகர் இவர்தானாம்.! பாத்தா அசந்துடுவீங்க.! யார் தெரியுமா.?

0
579
Actress-Sri-Reddy

சில மாதங்களாக தெலுகு சினிமாவில் நடிகைகள் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக குறி சர்ச்சையை கிளப்பி வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார். தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார்.

ajithkumar

தமிழ் சினிமா இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தொடங்கி நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பற்றி முகநூல் பக்கத்தில் சர்ச்சையான பதிவுகளை கூறிவருகிறார். அதோடு சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் போன்றவர்கள் பற்றியும் சர்ச்சையான பதிவை போட்டு தமிழ் சினிமாவை கதிகலங்கி வைத்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஸ்ரீரெட்டி ‘நான் இதையெல்லாம் விளம்பரத்திற்காக செய்யவில்லை. நானும் ஒரு பெண் தான் எனக்கும் திருமணமாகும் இதனால் நான் ஏன் இப்படி என் வாழக்கையை பற்றி கவலைப்படாமல் இதை செய்ய வேண்டும். யாராவது ஒருவர் மூலம் இந்த குற்றங்கள் எல்லாம் வெளி வர வேண்டும் என்று கூறினார்.

Atlee

அதே போல எனக்கு சென்னை மிகவும் பிடிக்கும். எனக்கு தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும், தமிழ் இயக்குனர்களில் வசந்த பாலன், அட்லி, கார்த்திக் சுப்புராஜ்,எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் ஆகியோரை பிடிக்கும்’ என்று கூறியுள்ளார்.