எனக்கு ஆதரவளித்த தமிழ் மக்களுக்கு உதவுவது என் கடமை..!கஜா புயல் பாதிப்புக்கு உதவி செய்த ஸ்ரீரெட்டி..!

0
91
Sriredy

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் அந்தரங்கத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் முருகதாஸ் தொடங்கி லாரன்ஸ்,ஸ்ரீகாந்த் வரை தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார்.

இது போன்ற பல சர்ச்சைகளால் தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடம் பிரபலமானார் ஸ்ரீரெட்டி. இதனையடுத்து ஸ்ரீரெட்டியால் குற்றம்சாட்டப்பட்டவரான ராகவா லாரன்ஸ், இவருக்கு படவாய்ப்பினை அளித்தார். தற்போது ரெட்டி டைரீஸ் என்று ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழக டெல்டா பகுதிகளை கடுமையாக தாக்கிய கஜா புயலால், பலர் தங்களால் இயன்ற நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகளை டெல்டா மாவட்டங்களுக்கு செய்து வருகின்றனர். இவர்களை போல ஸ்ரீரெட்டியும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்திருப்பதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்

அதில் ,திருவாரில் உள்ள 300 பேருக்கு ஒவ்வருவருக்கும் 2 கிலோ அரிசியை வழங்கியுள்ளேன். மேலும் குழந்தைகளுக்கு பிஸ்கெட் மற்றும் அத்யாவசிய பொருட்களான மெழுகு வத்தி, தண்ணி பாட்டில்களை வழங்கியுளேன். நான் ஆதரவின்றி இருந்த போது எனக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் உதவி செய்ய கடமை பட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.