தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். இவர் இளம் வயதிலேயே கேரளாவை தன்னுடைய பூர்வீகமாக மாற்றிக்கொண்டார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். அந்த காலத்திலேயே இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வருவார்கள். அதில் சுஜாதாவின் தந்தை மேனன் கேரளத்திலிருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து இருந்தார். பின்னர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார்.
சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்தார். பிறகு 11-ஆம் வகுப்பு தொடங்கும் போது கேரளாவில் வந்து செட்டிலாகி விட்டார்கள்.மேலும் சுஜாதா அவர்கள் 1977 ஆம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். சுஜாதா ‘போலீஸ் ஸ்டேஷன்’ என்ற மலையாள நாடகத்தில் தான் முதன்முதலாக நடித்தார். அந்த நாடகத்தின் மூலம் அவருக்கு ‘தபஷ்வினி’ என்ற மலையாள படத்தில் சுஜாதா அறிமுகமானார்.
இதையும் பாருங்க : ஹீரோ ஆனதும் Romanceல் கூட தேறிய புகழ் – வருங்கால மனைவியுடன் அவர் என்ன செய்துள்ளார் பாருங்க.
300 படங்களுக்கு மேல் நடித்த சுஜாதா :
மேலும் அவரின் நடிப்பை பார்த்து கே. பாலச்சந்தர் அவர்கள் 1977ம் ஆண்டு “அவள் ஒரு தொடர்கதை” என்ற படத்தில் முதன்முதலாக தமிழில் அறிமுகனார். அந்த படம் மகத்தான அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் திரைப்பட உலகில் பிரபலமானர். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
அஜித்தை போல் வாழ்ந்த சுஜாதா :
இவர் சிவாஜி கணேசன், முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த், கமலஹாசன், நாகேஸ்வரராவ், சோபன்பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். இடையில் இவர் என்ன ஆனார் என்பது கூட பலருக்கும் தெரியவில்லை. மேலும், சுஜிதா பெரிதாக பேட்டிகளை கொடுத்தது இல்லை. பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டது இல்லை. இறுதியாக சிவாஜி கனேசன் இறப்பின் போது அவரது கடைசி ஊர்வலத்தில் மனோரம்மாவின் கையை பிடித்தபடி நடந்து சென்றார்.
சுஜாதாவின் மரணம் :
அது தான் சுஜாதாவை இறுதியாக பொது இடத்தில் பார்த்தது. அதன் பின்னர் அவரை எந்த ஒரு நிகழ்விலும் காண முடியவில்லை. இவர் ‘வரலாறு’ படத்தில் அஜித் குமாரின் அம்மாவாக நடித்தது தான் அவருடைய கடைசி படம். அதற்கு அப்புறம் அவர் எந்த படமும் நடிக்கவில்லை என்றும் தெரியவந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இவருக்கு இருந்த இருத நோயால் பாதிக்கப்பட்டு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. மேலும் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் அகாலமரணம் அடைந்தார்.
இறப்பு பெரிதாக அறியப்படாத காரணம் :
ஆனால் இவர் மரணத்தைக் குறித்து யாரும் பெரிய அளவில் பேசப்படவில்லை.சுஜாதாவின் மரணத்தின் போது தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது. அதில் பிரச்சாரம், தேர்தல், ஆட்சி மற்றும் என பல பிரச்சனைகள் அரசியலில் ஏற்பட்டதனால் அவருடைய மரணம் குறித்து எந்த ஒரு ஊடகங்களிலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இது தமிழ் திரைப்பட உலகத்தில் மிகப்பெரிய சோகமான சம்பவம் ஆகும். தற்போது அவரை குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது. இதன் மூலம் தான் சுஜாதா இறந்து விட்டாரா? என்று பல பேருக்கு தெரிய வந்துள்ளது.