இத்தனை ஆண்டு கழித்தும் அவர் அதெல்லாம் மறக்கல..!உருகும் விஸ்வாசம் மூத்த நடிகை..!

0
279
Ajith

தமிழ் சினிமாவில் தல என்றழைக்கப்படும் அஜித் சினிமாவையும் தாண்டி பல விஷயங்களில் தன்னை ஈடுப்படுத்துபவர் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான். போட்டோ கலை, ரிமோட் விமானம் என இந்த வரிசை நீண்டு கொண்டு தான் போகிறது.

Sujatha

பொதுவாக நடிகர் நடிகைகளை எடுத்துக்கொண்டால் அஜித் பற்றிய புராணத்தை தான் அதிகம் சொல்வார்கள். அந்த அளவிற்கு தன்னுடன் பணியாற்றும் கலைஞர்களை மதிக்க கூடியவர் .இவரது நடிப்பில் தற்சமயம் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ள சுஜாதா சிவகுமார் சமீபத்தில் இப்படத்தில் பணியாற்றியதை பற்றி பேட்டியளித்தார்.

இதுகுறித்து பேசியுள்ள சுஜாதா, நான் அஜித்துடன் கடைசியாக வீரம் படத்தில் நடித்திருந்தேன். அந்த படம் வெளிவந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.நான் இப்போது அவருடன் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளேன். இருந்தாலும் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பார்த்த அஜித் சார் என்னுடைய பசங்களை இன்றும் ஞாபகம் வைத்து கொண்டு அவர்களை பற்றி விசாரித்தார்.

sujathaajith

மேலும், பசங்க அப்போது ஸ்கூல் படிச்சினு இருந்தாங்க, இப்போ காலேஜ்க்கு போய்ட்டாங்களானு கரெட்ட்டா கேட்கிறார். நான் அவரிடம் என் பசங்களபத்தி அவ்வளவாக சொன்னது கூட கிடையாது ஆனலும்,அதெல்லாம் அவர் இன்னமும் கூட மறக்கவே இல்லை என மிகவும் பூரிப்புடன் கூறியுள்ளார் நடிகை சுஜாதா.