என்ன ஒரு பொண்ணாவே மதிக்கல, உனக்கெல்லாம் யார் வாய்ப்பு கொடுத்ததுனு சொன்னார் – நவரநாயகன் குறித்து மனம் திறந்த நடிகை சுலோக்ஷனா

0
3192
- Advertisement -

நடிகர் கார்த்தி என்னை மதிக்கவே மாட்டார் என்று பிரபல நடிகை சுலோக்ஷனா இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுலோக்ஷனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் அறிமுகமாகியிருந்தார். பின் இவர் 1982 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான தூறல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் தான் நாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். பின் வாய்ப்புகள் குறைந்த உடன் இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சுலோக்ஷனா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.

- Advertisement -

சுலோக்ஷனா அளித்த பேட்டி:

அதில் அவர் நடிகர் கார்த்தி குறித்து கூறியது, நடிகர் கார்த்தி எப்போதுமே என்னை ஒரு பெண்ணாகவே மதித்தது கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னை கிண்டல் செய்து கொண்டே இருப்பார். அதோடு நடிகர் கார்த்திக் பற்றி பலருக்கும் தெரியும். அவர் எப்போதுமே சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடம் நன்றாக பேசிப் பழகுடியவர்.

கார்த்தி குறித்து சொன்னது:

ஆனால், என்னுடன் சேர்ந்து நடிக்கும் போது அவர் என்னை ஒரு பெண்ணாக நினைத்தது கூட கிடையாது. நீ எனக்கு ஒரு பாய் பிரண்ட். உன்னை பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. உன்னை பார்த்தால் ஒரு பொண்ணு என்ற ஃபீலிங் கொஞ்சம் கூட எனக்கு வரவில்லை என்று கிண்டல் செய்வார். அது மட்டும் இல்லாமல் உனக்கு யாரு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஒரு ஹீல்ஸ் செருப்பு போட்டு நடக்க கூட தெரியவில்லை.

-விளம்பரம்-

கார்த்தி திரைப்பயணம்:

இவங்களுக்கு நாயகி வாய்ப்பு கொடுத்துட்டீங்களே! என்றெல்லாம் கிண்டல் செய்வார். அப்படி அவர் கிண்டல் செய்தாலும் அவர் மீது எனக்கு கோபமே வராது. ஏன்னா, அவரைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் ஜொலித்துக்கொண்டிருந்த போது அவர்களுள் ஒருவராக இருந்தவர் முத்துராமன்.

கார்த்தி குறித்த தகவல்:

இவரது மகன் தான் நடிகர் கார்த்திக். இவரின் நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று இருக்கிறார். மேலும், தமிழ் சினிமா உலகில் இன்றும் நவரச நாயகனாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் கார்த்திக். தற்போது இவர் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Advertisement