தமிழில் நடிகர் நகுல் அறிமுகமான கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் காதலில் விழுந்தேன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பின்னர் மாசிலாமணி, வம்சம், சமர், போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதேபோல கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம்வர முடியவில்லை.
இதையும் படியுங்க : நகுலுடன் மூன்றாவது முறையாக ஜோடிசேரும் பிரபல நடிகை.! படத்தின் இயக்குனர் இவர்தான்.!
இருப்பினும் ஆண்டுதோறும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .இந்த நிலையில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவனுடன் சற்று நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட பல பேரும் இவர்தான் உங்களுடைய காதலா என்று வினாவி வருகின்றனர். ஆனால், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வருகிறார் நடிகை சுனேனா.
இறுதியாக விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘நிலா நிலா ஓடி வா ‘ என்ற வலைதள தொடரிலும் நடித்து வருகிறார். மேலும், இந்த ஆண்டு சில்லுக்கருப்பட்டி, எரியும் கண்ணாடி என்று இரண்டு புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகை சுனைனா என்பது குறிப்பிடத்தக்கது.