அது மட்டும் நடந்தா நாளைக்கே திருமணம் தான்.! நடிகை திரிஷா பேட்டி.!

0
1577
thrisha
- Advertisement -

தமிழ், தெலுங்கில் சில வருடங்கள் முன்னர் வரை நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. பல புதுமுகங்களின் வரவால் கடந்த சில வருடங்களாக அவருடைய மார்க்கெட்டும் கொஞ்சம் டல்லடித்தது. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தார்.

தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயமும் நடந்து, பின்னர் கருத்து வேறுபாடால் அது திருமணம் வரை செல்லாமல் நின்று விட்டது.முன்னணி நடிகையாக இருந்த போது த்ரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மீடியாவிலும் செய்தி வந்தது. ஆனால், வழக்கம் போல இருவரும் நண்பர்கள் என்று சொல்லி வந்தனர்.

இதையும் படியுங்க : எனக்கு தம்பி, த்ரிஷாவுக்கு அண்ணன்.! சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டு த்ரிஷாவை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி.!

- Advertisement -

ஆனால், திரைப்பட விழாக்கள், திரையுலக விழாக்கள் என அவர்கள் இருவரும் ஜோடியாக வந்து சென்றனர். த்ரிஷாவின் நிச்சயம் நடந்த பின் அவர்களைப் பற்றிய கிசுகிசுவுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. 
திருமணம் நின்ற பின் மீண்டும் ராணா – த்ரிஷா பற்றிய காதல் செய்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன.

அவ்வளவு ஏன் இவர் டேட்டிங் செய்து வந்த ஆர்யாவிற்கு கூட சமீபத்தில் திருமணம் நடைபெற்று விட்டது. எனவே, தற்போது இவருடன் பலரும் கேட்கும் கேள்வி எப்போது திருமணம் என்பது தான். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று திரிஷா தனது திருமணம் குறித்து பேசுகையில், இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து தான் நானே கூட திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement