தமிழ் சினிமாவின் முதல் கனவுகன்னியும் இவர் தான், திரையரங்கை கட்டிய முதல் நடிகையும் இவர் தான் – பிறந்தநாளில் நினைவுகொள்வோம் ராஜகுமாரியை

0
575
TRKumarai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் முன்னணி நடிகையாக இருந்தவர் டி ஆர் ராஜகுமாரி. இவருடைய உண்மையான பெயர் ராஜாயி. இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவர் நடிகை மட்டுமில்லாமல் நடனம், பாடல் என அனைத்திலும் திறமை பெற்றிருந்தார். இந்நிலையில் இவரைப்பற்றி பலரும் அறிந்திராத விஷயத்தைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகை டி ஆர் ராஜகுமாரிக்கு என்ற ஒரு தனி இடம் இருக்கின்றது. இவர் 1922ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் தன்னுடைய 16 வயதிலேயே குமார குலோத்துங்கா என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் தாமதமானதால் முதல் படமாக கச்ச தேவயானி நடித்த படம் 1941ல் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் கே.சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். மேலும், நடிகை எஸ்.பி.தனலட்சுமியை பலருக்கும் தெரியாது. ஆனால், இவருடைய மகள்களை அனைவருக்கும் தெரியும். கவர்ச்சி நடனத்தில் கலக்கிய ஜோதிலட்சுமி, ஜெயமாலினியின் தாய் தான் இவர். இவரது சகோதரி தான் டி ஆர் ராஜகுமாரியின் அம்மா.

- Advertisement -

டி ஆர் ராஜகுமாரி குறித்த தகவல்:

நடிகை டி ஆர் ராஜகுமாரி பேரழகு கொண்டவர். தியாகராஜ பாகவதர் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்று இவரை பார்த்து தான் பாடியிருந்தார். அன்றைய ரசிகர்கள் எல்லோரும் டி ஆர் ராஜகுமாரி அழகில் கிறங்கி போய் கிடந்தார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கனவு கன்னியாக இருந்தவர். சொல்லப்போனால், தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னி என்ற பட்டத்தை பெற்றவரும் தான். முதல் தலைமுறை சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா இருவருடனும் இவர் நடித்திருந்தார்.

திரையரங்கு கட்டிய முதல் நடிகை:

அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் டி ஆர் மகாலிங்கத்துடனும் இவர் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்தார். பின் சென்னை பாண்டிபஜாரில் டி ஆர் ராஜகுமாரி என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை கட்டினார். ஆங்காங்கே சிலைகளுடன் கலைநயத்துடன் கட்டப்பட்ட இந்த திரையரங்கில் எஸ் எஸ் வாசன் என்பவர் திறந்து வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் சொந்தமாக திரையரங்கு கட்டிய முதல் நடிகை என்ற பெருமையும் இவருக்குத் தான் வந்து சேரும்.

-விளம்பரம்-

ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகை:

இவரது தம்பி இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அவருடன் சேர்ந்து ஆர்.ஆர்.பிக்சர்ஸ் என்ற படநிறுவனத்தை தொடங்கி இருந்தார். இதில் எம்ஜிஆர், சிவாஜி நடிப்பில் கூண்டுக்கிளி படத்தை தயாரித்தார். அவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் இது தான். ஆனால், படம் தோல்வி அடைந்ததால் எம்ஜிஆரை வைத்து குலேபகாவலி என்ற படத்தை தயாரித்து நடிக்கவும் செய்திருந்தார். படம் வெற்றி பெற்றது. பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்ஜிஆர் என நான்கு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர் தங்கப்பதுமையில் இன்னொரு சூப்பர் ஸ்டார் சிவாஜியுடன் நடித்தார்.

டி ஆர் ராஜகுமாரி சாதனை:

இதன் மூலம் ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த முதல் நடிகை என்ற பெருமை அவரக்கு கிடைத்தது. இதன் பிறகு இந்த சாதனையை செய்த நடிகை பானுமதி ஒருவர் தான். மேலும், கடைசியாக டி ஆர் ராஜகுமாரி நடித்த படம் 1964-ல் வெளிவந்த வானம்பாடி. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமலஹாசனும் நடித்திருந்தார். டி ஆர் ராஜகுமாரி திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது தம்பிகள் அவர்களது குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர். பின் இவர் 1999ல் மரணமடைந்தார். இவருடைய சாதனைகளில் சொற்பம் தான் நாம் பார்த்தது. அவர் கடந்து வந்த சிகரங்கள் இன்னும் ஏராளம்.

Advertisement