விநாயகர் கோயிலுக்கு நடிகர் திரிஷா இலட்சக்கணக்கில் பரிசளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோயில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கோயிலுக்கு நடிகை திரிஷா அவர்கள் People For Cattle In India உடன் இணைந்து பரிசு கொடுத்திருக்கிறார்.

அது வேறு ஒன்றும் இல்லை இயந்திர யானை தான். இதனுடைய மதிப்பு கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய். இந்த யானைக்கு கஜா என்று பெயரிட்டு இருக்கிறார்கள். கோயில்களில் வனவிலங்குகளை பாதுகாக்கும் விதமாக, கோயில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையில், கோயில்களில் யானைகள் பக்தர்களை தாக்குவதை தடுக்கும் வகையிலும், பக்தியை வளர்க்கும் விதமாகவும் இந்த இயந்திர யானையை வழங்கி இருக்கிறார்கள்.
திரிஷா கொடுத்த பரிசு:
இந்த யானை சுமார் 300 மீட்டர் உயரம், 800 கிலோ எடையுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திர யானையில் சக்கரங்களும் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வீதி உலா செல்லும் வகையில் அதன் காதுகள், துதிக்கைகள், தலை அனைத்துமே அசையும் வகையில் தத்ரூபமாக உண்மையான யானை போல உருவாக்கியிருக்கிறார்கள். இந்த யானை பக்தர்கள் மீது தண்ணீரை பீச்சி அடிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=YfIoqhXYjBU
இயந்திர யானை பற்றிய தகவல்:
மேலும், இந்த இயந்திர யானை அறிமுக விழா நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதவி காவலர் கண்காணிப்பாளர், நகர் காவலர் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு புது இயந்திர யானையை அறிமுகம் செய்திருக்கிறார்கள். பொதுமக்கள், பக்தர்கள் அனைவருமே இணைந்து மலர் தூவி இந்த பிரம்மாண்ட யானை வரவேற்றுகிறார்கள். இந்த இயந்திர யானைக்கு தீபாரதனையும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது

திரிஷா குறித்த தகவல்:
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திரிஷா படங்கள்:
சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். அந்த வகையில் திரிஷா நடிப்பில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த குட் பேட் அக்லி என்ற படத்தில் திரிஷா நடித்து இருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூலை செய்தது. இதை அடுத்து தற்போது திரிஷா அவர்கள் கமல் நடிப்பில் வெளிவந்த தக் லைப் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார்.
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் மூலம் திரிஷாவிற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்தது. இதை அடுத்து திரிஷா தெலுங்கில் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு போன்ற படங்களில் எல்லாம் கமிட்டாகி நடித்து வருகிறார்.






