தன்னுடைய திருமணம் நின்று போனது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை திரிஷா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், 40 வயதை கடந்தும் திரையுலகில் சிங்கிளாக வலம் வரும் கதாநாயகிகளில் இவரும் ஒருவர். சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் இவர் இன்றும் புதுமுக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார். கடைசியாக திரிஷா நடிப்பில் வெளியாகி இருந்த படம் விடாமுயற்சி. அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ வெளியாகி இருந்தது.
திரிஷா திரைப்பயணம்:
இந்த படம் ரசிகர்கள் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். இதை அடுத்து இவர் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் திரிஷாவின் திருமணம் குறித்து பலரும் கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும், திரிஷா- வருண் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று சில காரணங்களால் நின்று போனது.

திரிஷா பேட்டி:
இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே அளித்த பேட்டியில் திரிஷாம், என்னுடைய திருமணம் நின்று போனது. என்னுடைய குடும்பத்தில் என்னை ரொம்ப பொத்தி பொத்தி பார்த்துக் கொண்டார்கள். காரணம், நான் ஒரே ஒரு பெண். ஆனால், என்னை நம்ப வைத்து ஏமாற்றி துரோகம் செய்ததெல்லாம் கிடையாது. இன்று கூட எனக்கு யாராவது துரோகம் செய்துவிட்டாலோ, என்னிடம் பொய் சொல்லிவிட்டாலோ எனக்கு அவ்வளவு கோபம் வரும். உடனே என் அம்மா, இதுதான் உலகம். அமைதியாக இரு என்று எனக்கு சமாதானம் செய்வார்.
https://www.youtube.com/watch?v=nvbcKugALv0
திருமணம் ரத்து பற்றி சொன்னது:

திரிஷா ஆதங்கம்:
உண்மையில் என்னுடைய திருமணம் நின்று போனதற்கான காரணம் யாருக்குமே தெரியாது. ஒருவருடைய தனிப்பட்ட விஷயத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருவரைப் பற்றி தவறாக பேசுவது நல்ல விஷயம் கிடையாது. என்னைப் பற்றி வரும் கதைகளை நினைத்து நான் கவலை கொள்ளவில்லை. மக்கள் ஏன் ஒருவருடைய தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேசுகிறார்கள்? எப்போதுமே என்னுடைய குடும்பம் எல்லா நிலையிலும் துணையாக இருக்கிறது. என்னை பற்றி வரும் கிசுகிசுகளுக்கும், சர்ச்சைகளுக்கும் என்னுடைய அம்மா, அப்பா எல்லாம் துணையாக இருந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.






