பிக் பாஸ்’ வாய்ப்பு..! யாரும் பாக்காத ஷாரிக்கின் கோபம்.! உமா ரியாஸ் ஓபன் டாக்

0
2477
shariq-hassan
- Advertisement -

ஷாரிக் ஹாசனை `பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே விடுறப்போகூட எனக்குப் பெரிய வருத்தம் இல்லை. ஆனா, நிகழ்ச்சியில பார்க்கும்போது, ரொம்ப மிஸ் பண்றேன்” என்கிறார், உமா ரியாஸ்.

-விளம்பரம்-

shariq

- Advertisement -

பிக் பாஸ் 2′ நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதில், பதினாறு போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் பலரும் ஏற்கெனவெ மக்களுக்கு அறிமுகமான முகங்கள்தாம்… சிலரைத் தவிர!. இந்நிகழ்ச்சியின் 15-வது போட்டியாளராக நுழைந்த ஷாரிக் ஹாசன், ரியாஸ் கான் – உமா ரியாஸ் ஆகியோரது மகன். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான `பென்சில்’ படத்தில் ஷாரிக் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். ஷாரிக் பற்றி, அவரது அம்மா உமா ரியாஸ்கானிடம் பேசினோம்.

“உங்க பையன் ஷாரிக் பற்றி…?”

-விளம்பரம்-

“ஷாரிக் ரொம்ப அமைதியான பையன். சின்ன வயசுல ஏவி.எம் ஸ்கூல்ல படிச்சார். அதனாலதான் இவ்வளவு அமைதியா இருக்கியானு கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பேன். இதுவரைக்கும் அவரை நான் பிரிந்ததே இல்லை. `பிக் பாஸ்’ வீடுதான் எங்களைப் பிரிச்சிருக்கு. என்கிட்ட மட்டும்தான் ஷாரிக் கோபப்படுவார். அவங்க அப்பாவைவிட என்கிட்டதான் ரொம்ப குளோஸ். வீட்டுல எல்லோரும் சினிமாவுல இருக்கிறதுனால, அவனுக்கும் சினிமா ஆர்வம் அதிகம். பிக் பாஸ் வீட்டுல அவரோட நடவடிக்கைகளைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.”

sharik

“ `பிக் பாஸ்’ வாய்ப்பு?”

“விஜய் டிவி-க்கு யாரோ ஷாரிக் பத்திச் சொல்லியிருக்காங்க. விஜய் டிவி ஹெட் பிரதீப் மில்ராய் எங்க பையனைப் பார்க்கணும்னு சொன்னார். பிறகு, `பிக் பாஸ்’ல கலந்துக்கிறீங்களானு கேட்டாங்க, அனுப்பிவெச்சோம். நேற்று நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, ஷாரிக் நீச்சல் குளத்தைக் கழுவிக்கிட்டு இருந்தார். அதைப் பார்க்கும்போது, கண் கலங்கிடுச்சு. ஜாலியா, சந்தோஷமா இருந்துட்டு வரட்டும்னுதான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பிவெச்சேன். ஆனா, முதல் எபிசோட் பார்க்கும்போதே, தேம்பி அழ ஆரம்பிச்சுட்டேன்.”

“ஷாரிக் ஹாசனுக்கு என்ன அட்வைஸ் கொடுத்து அனுப்பிவெச்சீங்க?”

“ரொம்ப கூலா இருக்கணும், பொய் சொல்லக் கூடாது. எந்த ஒரு விஷயமா இருந்தாலும், உனக்குத் தப்புனு பட்டா குரல் கொடுக்கணும். சண்டை போடணும்னு தோணுச்சுனா, சண்டை போடு. ஆனா, அந்தச் சண்டை ஆரோக்கியமான சண்டையா இருக்கணும். குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ள ஃபிக்ஸ் ஆகிடாதே… மொத்தத்துல, நீ நீயா இருனு சொல்லி அனுப்பினேன்.”

“இந்த நிகழ்ச்சி மூலமா பையனுக்கு நெகட்டிவ் இமேஜ் வந்திடும்ங்கிற பயம் வந்துச்சா?”

“சின்னப் பையனாச்சே… இப்பவே ஒரு நெகடிவ் இமேஜ் விழுந்தா, என்ன ஆகுறதுனு அவங்க அப்பாதான் பயந்தார். எனக்கு அந்தப் பயம் இல்லை. இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. அதை மக்கள் புரிஞ்சுக்குவாங்க. தவிர, எங்க பையன் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா அவன் மக்கள் மனசுல இடம்பிடிப்பான்.”

“உங்க பையனோட கேரக்டர் பற்றி சொல்லுங்க?”

“ரொம்ப ஜாலி டைப். எல்லோர்கிட்டேயும் நல்லா பேசுவார், காமெடி பண்ணுவார். அவருக்குத் தோசை, பீட்சா சமைக்கத் தெரியும். வீட்டை சுத்தமா வெச்சுக்க ஆர்வம் காட்டுவான். அதனால, அவனுக்கு வீட்டை க்ளீன் பண்றதெல்லாம் பெரிய கஷ்டமா இருக்காது. ஷாரிக், அவங்க அப்பா மாதிரி ஃபிட்னெஸ் ப்ரீக். உடற்பயிற்சிகள் பண்றது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.”

bigg boss Shariq-Hassan

“ `பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள எந்த விஷயம் ஷாரிக் ஹாசனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறீங்க?”

“கோபப்படாம இருந்தா சரி! ஏன்னா, அவரோட கோபத்தை இதுவரை நான் மட்டும்தான் பார்த்திருக்கேன். இந்த உலகம் பார்த்தில்லை!” எனச் சிரிக்கிறார், உமா ரியாஸ்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.

Advertisement