உலகில் யாரும் செய்யாத தவறை நான் செஞ்சிட்ட – குடித்துவிட்டு கார் ஓட்டிய நடிகையின் திமிர் பேச்சு – வீடியோ உள்ளே.

0
4321
vamshika
- Advertisement -

குடித்துவிட்டு போலீசிடம் மாட்டிய நடிகை கொடுத்த விளக்கத்தால் பலரும் ஆடிப்போய் உள்ளார்கள். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு அதிவேகமாக கார் ஒன்று சென்றுள்ளது. இதனை பார்த்த ஒரு சிலர் அந்த காரை துரத்தி பிடித்து உள்ளனர். பின்னர் அந்த காரை ஓட்டிய பெண் குடிபோதையில் இருந்ததாக தெரிந்ததும் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் அவர் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை வம்ஷிகா என்பது தெரியவந்துள்ளது. தன் காரை மடக்கி பிடித்த பொதுமக்களுடன் அந்த நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

-விளம்பரம்-

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடிகை வம்ஷிகாவின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அவர் குடித்து இருக்கிறாரா இல்லையா என்பதை சோதனை செய்து பார்த்துள்ளனர். பின்னர் அவர் குடி போதையில் இருப்பதை உறுதி செய்த போலீசார் குடித்துவிட்டு கார் ஓட்டிய குற்றத்திற்காக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து நேற்று மாலை பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த நடிகை வம்ஷிகா பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

- Advertisement -

அப்போது பேசிய அவர், தன்னுடைய காரின் நம்பர் கர்நாடகா பகுதியை சேர்ந்தது என்பதால் பொதுமக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு பெண் தான் ஓவராக சீன் போட்டார். அது போக நான் எந்த காரையும் இடிக்கவில்லை. அதேபோல நான் குடிக்கவில்லை ஒரே ஒரு பீர் மட்டும் தான் குடித்தேன் என்று வம்ஷிகா கூறியபோது அங்கே இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் அப்போது பீர் குடித்துவிட்டு கார் ஓட்டலாம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர் நான் ஒன்றும் மிதம்மீறி குடிக்கவில்லை. ஒரே ஒரு பீர் மட்டும் தான் குடித்தேன் அதுவும் நான் நிதானத்தில் தான் இருந்தேன்.

நான் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று பலரும் இதை பெரிய விஷயமாக பேசி இருக்கிறார்கள். ஆனால் நான் தமிழகத்தை சேர்ந்தவர் தான். மது அருந்திவிட்டு கார் ஓட்டியது தவறுதான் ஆனால் உலகில் யாரும் செய்யாத தவறை நான் செய்ததுபோல குற்றம் சாட்டுகிறார்கள் என்று மிகவும் திமிராக பேசியிருக்கிறார். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக நடிகை வம்ஷிகாவிற்கு காவல்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக நடிகை வம்ஷிகாதெரிவித்திருக்கிறார். குடித்துவிட்டு கார் ஓட்டியதை குற்றம் இல்லாதது போல நடிகை வம்ஷிகா கூறியிருக்கிறது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement