என்னுடைய அத்தன விவாகரத்திற்கு காரணம் என் அப்பா தான் – வனிதா விஜயகுமார் சொன்ன விஷயம்

0
192
- Advertisement -

என்னுடைய விவாகரத்திற்கு காரணம் அப்பா தான் என்று வனிதா விஜயகுமார் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் ஆண்கள் தினம் நடைபெற்று இருந்தது. இதில் பெண்கள் கொண்டாடும் ஆண்கள் யார்? என்று கேள்வி முன்வைக்கப்பட்டு பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு விவாதம் செய்திருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் வனிதா, நான் பார்த்து வியந்த ஆண் என்றால் என்னுடைய தந்தை விஜயகுமார் தான்.

-விளம்பரம்-

பெண்களால் ஆண்களை விட ரொம்ப எளிதாக ஒருவரை மறக்க முடியும், மன்னிக்கவும் முடியும்.
என்னுடைய சின்ன வயதில் என்னுடைய அப்பா தான் இருப்பதிலேயே சிறந்த தந்தை என்று நினைத்தேன். அது மட்டும் இல்லாமல் அவர் தான் இந்த உலகினுடைய சிறந்த கணவர் என்று சொல்லுவேன். காரணம், அவருக்கு இரண்டு மனைவிகள். ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையில் இது சாத்தியமே கிடையாது. இருந்தாலும், அவர் சாத்தியம் ஆக்கினார்.

- Advertisement -

வனிதா விஜயகுமார் சொன்னது:

ஒரு மனைவியை வைத்திருக்கும் ஆண்களே திண்டாடுவார்கள். ஆனால், என்னுடைய அப்பா இரண்டு மனைவிகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்து நடத்தியதால் தான் இப்போதும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார். என்னுடைய அம்மா ரெண்டாவது மனைவி தான். என்னுடைய அப்பாவையும் என்னுடைய அம்மாவையும் அவருடைய முதல் மனைவி ஏற்றுக் கொண்டார். அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவருமே ஒரே குடும்பமாக தான் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். அது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

ஆண்கள் குறித்து சொன்னது:

இவர்கள் இப்படி ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் என்னுடைய அப்பா இருவரையும் சரிசமமாக நடத்துவது தான். பெண்களுக்கு சில விஷயங்களை கையாள தெரியாமல் போகும் போது தான் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும். பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியும். ஆனால், ஆண்களால் முடியாது. கடிவாளம் கட்டிய குதிரை போல் ஒரே நேர்கோட்டில் தான் செல்வார்கள். ஒரு விஷயத்தின் மீது தான் அவர்கள் கவனம் இருக்கும்.

-விளம்பரம்-

அப்பா குறித்து சொன்னது:

அவர்கள் ஒரு வேலையை விட்டு அடுத்த வேலைக்கு சென்றால் டென்ஷன் ஆகிவிடுவார்கள். ஆனால், என்னுடைய அப்பா போன்ற சில ஆண்கள் பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள தெரிந்தவர்கள்.
அவர்கள் குடும்பத்தை மட்டுமில்லாமல் தொழிலிலும் கவனமாக இருப்பார்கள். வீட்டு வேலை, குடும்பம், தொழில் என எல்லாத்தையுமே சிறப்பாக கையாளுவார். அப்படி என்னுடைய அப்பாவை பார்த்ததால் தான் என்னுடைய வாழ்க்கையில் வந்த எல்லா ஆண்களும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

விவாகரத்துக்கு காரணம்:

அப்பா எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் அருணும் இருக்கிறான். அதனால் என் வாழ்க்கையில் வந்த ஆண்களுமே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அது அமையாததால் தான் எனக்கு அந்த ஆண்களுடனான உறவை ஏற்றுக் கொள்ள மனம் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார். தற்போது வனிதா படங்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகள், பிசினஸ் என பிசியாக இருக்கிறார்.

Advertisement