இந்த நம்பரை ரகசியமாக கொடுங்கள்- வரலக்ஷ்மி பதிவிட்ட அறிவுரை வீடியோ.

0
1264
- Advertisement -

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி படைத்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30000 நெருங்கியது மற்றும் பலியாகும் எண்ணிக்கை 1000 நெருங்கியது. இதனால் ஊரடங்கு உத்தரவை இன்னும் 10, 15 நாள் என்று நீட்டித்து கொண்டே செல்கிறார்கள். இன்னும் எத்தனை நாள் இந்த பிரச்சனை நீட்டிக்குமோ? என்ற கவலையில் மக்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை வரலட்சுமி அவர்கள் பெண்கள் மீதான குடும்ப வன்முறை குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது,

இந்த வீடியோவில் பெண்களுக்காக ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து உள்ளேன். இந்த லாக் டவுன் சமயத்தில் பல குடும்ப பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லாக் டவுனால் அந்தப் பெண்களால் தப்பிக்க முடியவில்லை. அந்தப் பெண்கள் தப்பிக்க வழியில்லாமல் வீட்டில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார்கள். இந்த சமயத்தில் அந்த மாதிரியான பெண்களுக்கு ஒரு ஹெல்ப் லைன் இருக்கிறது. அந்த நம்பர் 1-800-102-7282.

-விளம்பரம்-

இந்த நம்பரை அழைத்து உதவி கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வார்கள். உங்களுக்குத் தெரிந்த அத்தனை பெண்களுக்கும் இந்த எண்ணைக் கொடுங்கள். பல பெண்களின் வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் கூட கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும். அதுமட்டும் இல்லாமல் இந்த நம்பரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொடுங்கள். அதோடு குழந்தைகள் முன் கொடுக்காதீர்கள். குழந்தைகள் தெரியாமல் தப்பித்தவறி போய் சொல்லிவிட்டால் அதுவே உங்களுக்கு பிரச்சினையாகி விடும்.

பெண்கள் தனியாக இருக்கும் போது இந்த நம்பரை கொடுங்கள். இந்த நம்பரை உபயோகிக்க வயது, செல்வாக்கு, படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாதிரியான பெண் கொடுமைகள் யாருக்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தத் தொலைப்பேசி எண்ணை அனைவருக்கும் பரப்புங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். இப்படி நடிகை வரலக்ஷ்மி பதிவிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்த்த பலர் நடிகை வரலக்ஷ்மிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தில் தான் இவர் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் ‘சேசிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் பைக் ரைடர் ஆக நடித்துள்ளார்.

Advertisement