நடிகை வரலட்சுமி வீட்டில் மரணம் ! புகைப்படத்தை கிண்டல் செய்த ரசிகர்கள் !

0
3221
Actress varalakshmi

நடிகர் சரத்குமாரின் முதல் மகள் வரலட்சுமி. இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயின் வேடங்களை மட்டுமே ஏற்று நடிக்காமல் சவாலான கேரக்டரில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை பெற்று வருகிறார் வரலட்சுமி.

varalaxmisarathkumar

மேலும், கடந்த வருடம் நடிகை பாவனாவிற்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு பிறகு நடிகைகளுக்கு உதவும் ‘சேவ் சக்தி’ என்னும் அமைப்பினை துவங்கினார் வரலட்சுமி.

மேலும், விலங்கினங்கள் மீது மிகவும் பாசம் கொண்டவராக இருக்கும் வரலட்சுமி ப்ளூ க்ராஸ் மற்றும் பல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார்.இந்நிலையில் இவரது டினோ என்ற நாய் இறந்துவிட்டது.

இதனால் மிகவும் மனவருத்தத்தில் இருக்கும் வரலட்சுமி டினோவை மிகவும் மிஸ் செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், டினோவுடன் இருந்த பழைய புகைப்படங்களை போட்டு உருக்கமான பதிவு செய்துள்ளார் வரலட்சுமி.