தியாகராஜா குழுவில் வந்த நடிகை,பாடல் To நாடகம், நாடகம் To சினிமா – பிரபல நடிகை திடீர் மரணம்.

0
2146
Vasantha
- Advertisement -

நடிகர் ரஜினிக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை வசந்தா காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் வசந்தா. இவர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடகக் குழுவின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன் மூலம் தான் இவருக்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பின் இவர் தமிழ் சினிமா உலகில் நடிகர்களாக இருந்த ஜெய்சங்கர், அசோகனுக்கு எல்லாம் ஜோடியாக நடித்திருக்கிறார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையதொடங்கியவுடன் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பெரும்பாலும், இவர் படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ராணுவ வீரன் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக நடித்திருந்தார். அதேபோல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூன்றாம் பிறை படத்திலும் அம்மாவாக இவர் நடித்திருந்தார். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வசந்தா நடித்திருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை வசந்தா அவர்கள் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை 3:30 மணியளவில் அவரது வீட்டிலேயே வசந்தா இறந்து இருக்கிறார். தற்போது இவருக்கு 82 வயது ஆகிறது. மேலும், இவருடைய இறப்பு குறித்த செய்தி தெரிந்தவுடன் திரையுலக பிரபலங்கள் பலரும் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் நடிகர் சங்க நிர்வாகிகளும் இவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதனை அடுத்து இன்று மதியம் 1:30 மணியளவில் நடிகை வசந்தாவின் இறுதி சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி இவரின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.இவரது இறப்பு குறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் சின்னஞ்சிறு வயதில் ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜாவின் குழுவில் இருந்து ஆரம்பிக்கிறது வசந்தா அவர்களின் பயணம்.

பாடலிலிருந்து நாடகம், நாடகத்திலிருந்து சினிமா என்று அவரின் கலை உலக எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே பயணித்தார். எத்தனை நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள். எப்போதும் புன் சிரிப்பு, தாய்மை வடியும் பேச்சு, தானாக முன்வந்து உதவும் மனப்பான்மை, நல்லதொரு ஆன்மா இன்று தன் பயணத்தை முடித்துக் கொண்டது. ஆனால், அவர் கலை படைப்புகள் என்றும் நம் நினைவில் நிழலாடிக்கொண்டே இருக்கும் அன்னாரை இழந்து வாடும் உற்றார்க்கும் சுற்றத்தாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அனுதாபங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement