தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வசுந்தரா காஷ்யப்.1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி டெல்லியில் பிறந்த இவரது தந்தை தமிழ் நாட்டை சேர்ந்தவர்.
ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார்.பின்னர் அதில் கிடைத்த பெயர் மூலம் 2006 இல் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு மகளாக நடித்தார்.அதன் பின்னர்
*உன்னாலே உன்னாலே
* காலைப்பணி
*ஜெயம்கொண்டான்
* பேராண்மை
போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்து 2010 இல் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான்.
அந்த படத்திற்கு பின்னரே இவருக்கு சில படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க படங்கள் சுச்சு லீக்ஸ்ஸில் வெளியாக இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது.பின்னர் இரண்டு ஆண்டகளாக படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார் வசுந்தரா.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் மானே தேனே என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.