தமிழ் சினிமா உலக எத்தனையோ நடிகர், நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தங்கர் பச்சானின் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார் வெண்பா. இதனை தொடர்ந்து இவர் கற்றது தமிழ் படத்திலும் குட்டி ஆனந்தியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று இருந்தார்.
இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிறு வயதிலேயே நடிப்பது மட்டுமில்லாமல் தனியார் தொலைக்காட்சியில் விஜேவாகவும் பணி புரிந்திருக்கிறார். பின் இவர் கதாநாயகியாகவும் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் இவர் முதன்முதலாக காதல் கசக்குதையா என்ற படத்தின் மூலம்தான் ஹீரோயினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பள்ளி பருவதிலேயே, மாய நதி போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
வெண்பா திரைப்பயணம்:
இவர் நடித்த படங்கள் மூலம் இவருக்கு என்று நல்ல பெயரை தந்திருக்கிறது. மேலும், இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் வெண்பா நடித்து இருந்தார். இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார்.
ஆனந்தம் விளையாடும் வீடு :
இந்த படத்தில் சேரன், கௌதம் கார்த்திக், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, பிக்பாஸ் சினேகன் என பெரும் நடச்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். குடும்பப் பாச கதையாக ஆனந்தம் விளையாடும் வீடு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கௌதம் கார்த்தியின் தங்கையாக வெண்பா நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.
ஆயிரம் ஜென்மங்கள் படம்:
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான அல்வா என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார் வெண்பா. தற்போது இவர் ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எஸ். எழிலின் இயக்குகிறார். இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ்குமார், நிகிஷா படேல், ஈஷா ரெபா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். திகில் மற்றும் நகைச்சுவை பாணியில் ஆயிரம் ஜென்மங்கள் படம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் வெண்பா சின்னத்திரையில் ரி என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வெண்பா பதிவிட்ட பதிவு:
பிரபல மீடியோ செய்தி ஒன்று வெண்பாவிற்கு சினிமா வாய்ப்புகள் இல்லை என்பதால் சீரியலில் நடிக்க இருக்கிறார். இதனால் இவர் சீரியலில் கொடுக்கும் ரீஎன்ட்ரி நன்றாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று வெளியிட்டிருந்தது. இதனை பார்த்த வெண்பா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் இப்போதும் சினிமாவில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு சீரியல் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நான் எதிலும் நடிக்கவும் ஒப்புக்கொள்ளவில்லை. உண்மை தெரிந்து கொண்டு செய்தியை போடுங்கள். இது போன்ற தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.