திடீரென்று சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சீமான்- விஜயலட்சுமி குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவரை குறித்து சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன.
பின் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று போலீசில் விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
விஜயலட்சுமி அளித்த புகார்:
ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். பின் சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. மேலும், இது குறித்து சில நாட்களுக்கு முன்பு ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி இடம் துணை கமிஷனர் உரிமையாளர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தார்.
போலீஸ் விசாரணை:
பின் திருவள்ளூர் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்து இருந்தார். இதை அடுத்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால், சீமான் ஆஜராகவில்லை. இது குறித்து மீண்டும் விஜயலக்ஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும், சீமானுக்கு சம்மன் கொடுக்கப்பட்டதை அடுத்து விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்திருந்தார்.
வீரலட்சுமி அளித்த பேட்டி:
இதற்கு வீரலட்சுமி கூறியது, நாங்கள் வருகிறோம். நீங்கள் உங்கள் மனைவியுடன் வர தயாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சீமான் கூறியது, நான் பெரிய ரவுடி. பிரச்சனை செய்தால் கட்சியாவது மண்ணாவது வெட்டியிட்டு போயிட்டே இருப்பேன். வீரலட்சுமி யாரு? எதற்காக என் விஷயத்தில் தலையிடுறாங்க? கயல்விழி எனது மனைவி மட்டுமல்ல ஒரு வழக்கறிஞரும் கூட. என்னை என்ன யாரும் இல்லாத வெறும் பையன நினைச்சீங்களா? என்று கடுமையாக பேசியிருந்தார்.
வாபஸ் வாங்கிய விஜயலக்ஷ்மி:
இந்த நிலையில் விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தான் கொடுத்த புகார் மனுவை வாபஸ் வாங்கி இருக்கிறார். பின் இவர், இந்த வழக்கை வாபஸ் வாங்க யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. இதற்காக நான் பணமும் வாங்கவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக என்னால் போராட முடியவில்லை. சீமான எதிர்த்துக் கொள்ள எனக்கு போதிய ஆதரவும் இல்லை என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். இப்படி திடீரென்று விஜயலட்சுமி பல்டி அடித்ததற்கு காரணம் என்ன என்று சோசியல் மீடியாவில் பலரும் விவாதித்து வருகிறார்கள்.