பிக் பாஸ் பிரபலம் வினுஷா தேவி நடிக்க இருக்கும் புது சீரியல் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் வினுஷா தேவி. இவர் சோசியல் மீடியா மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இவர் டிக் டாக், இன்ஸ்டாவில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.
அதன் மூலம் தான் இவருக்கு மீடியாவில் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் மாடிலிங் செய்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து இருந்தார். முதலில் இந்த ரோலில் ரோஹினி தான் நடித்தார். அவர் விலகிய பின் வினுஷா கண்ணம்மாவாக நடித்து இருந்தார். டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் இருந்தது.
வினுஷா குறித்த தகவல்:
இதைத்தொடர்ந்து பாரதி கண்ணம்மா 2 சீரியல் ஒளிபரப்பாகி இருந்தது. இதிலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. பின் கதை மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்கப்படவில்லை என்றவுடன் பாதியிலேயே சீரியலை முடித்து விட்டார்கள். இதைத்தொடர்ந்து இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வினுஷா:
மேலும், நிகழ்ச்சி ஆரம்பத்தில் இவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை, கன்டென்ட் கொடுக்கவில்லை என்று போட்டியாளர்கள் கூறி போயிருந்தார்கள். அதற்குப் பின் இவர் விளையாட ஆரம்பித்தபோது இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார்கள். குறிப்பாக, நிக்சன் இவரை உருவ கேலி செய்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் இது குறித்து வினுஷா, நிக்சன் மற்றும் மற்ற போட்டியாளர்களிடம் பேசி இருந்தார்.
வினுஷா நடித்த படம்:
இதனிடையே வினுஷ் கதாநாயகியாக N4 என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, அழகு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வினுஷா சினிமா, சீரியல் கவனம் செலுத்தி வருகிறார்.
வினுஷா நடிக்கும் புது சீரியல்:
இந்த நிலையில் வினிஷா தேவி ‘பனி விழும் மலர்வனம்’ என்ற புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். விஜய் டிவியில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஏழ்மையில் இருக்கும் ஹீரோயின், பணக்கார குடும்பத்தில் இருக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த சீரியல் எடுக்கப்படுகிறது. காதல், குடும்பங்களை மையமாக வைத்து இந்த சீரியலை இயக்குனர் எடுத்து வருகிறார். தற்போது இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கூடிய விரைவில் இந்த சீரியல் குறித்து தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.