கவுண்டமணியுடன் இருக்கும் இந்த மறைந்த நடிகர் யாரு தெரியுமா ? இவர் மகன் இந்த இயக்குனர் தான்.

0
622
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பெரிய கருப்பு தேவர். இவர் உசிலம்பட்டியை சேர்ந்தவர். திரு சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கப்பட்ட நாடகக்குழுவில் மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின் பல மேடைகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. சினிமா துறையில் நுழைந்ததும் இவர் தன்னுடைய நடிப்பு மட்டுமில்லாமல் நாட்டுப்புறப் பாடல்களை பாடியும் இருக்கிறார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் கரகாட்டக்காரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலம் பாடல்களை பாடி அசத்தியிருப்பார் பெரிய கருப்பு தேவர். இந்த படத்திற்கு பிறகு இவரை விருமாண்டி பெரியகருப்ப தேவர் என்று அழைத்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இவர் பாடிய பாடலை பார்த்து கமலஹாசன் பாராட்டியிருந்தார். இவர் கடைசியாக ஆடுகளம் திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. பின் 2012 ஆம் ஆண்டு சாலிகிராமத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பெரிய கருப்பு தேவர் உயிரிழந்தார்.

- Advertisement -

விருமாண்டி திரைப்பயணம்:

இவரின் இழப்பு திரை உலகில் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. மேலும், இவருக்கு நான்கு மகன்கள் உள்ளார்கள். அதில் இவருடைய இளைய மகன் விருமாண்டி. இவர் வேற யாரும் இல்லைங்க, க/பெ ரணசிங்கம் படத்தின் இயக்குனர். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் உலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இப்படி பிரபல நடிகரின் மகன் இயக்குனராக சினிமா உலகில் கால்தடம் பதித்ததை குறித்து பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

விருமாண்டியின் முதல் படம் அனுபவம்:

அதில் அவர் கூறியது, நான் என்னுடைய முதல் படத்துக்காக நிறைய போராடி இருந்தேன். என் போராட்டமெல்லாம் படம் பண்ண ஆரம்பித்த பிறகு பிளஸ் ஆக அமைந்தது. சூட்டிங் ஸ்பாட்டில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் என்னால் அதை ஈசியாக சமாளிக்க முடிகிறது. இத்தனை வருடமாக எவ்வளவு பிரச்சினையை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்திருப்பேன். கோபப்பட்டால் ஒன்னும் செய்ய முடியாது. அதைவிட எப்படி அந்த பிரச்சனையை தீர்க்கும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அனுபவம் தான் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடம். நான் முதலில் இயக்குனர் செல்வா சாரிடம் 12 வருடம் உதவி இயக்குநராக இருந்தேன்.

-விளம்பரம்-

அப்பாவை பற்றி இயக்குனர் விருமாண்டி சொன்னது:

பிறகு கோபி நயினார் இயக்கிய படத்தில் இணை இயக்குனராக வேலை பார்த்தேன். அதற்குப் பிறகுதான் நான் க/பெ ரணசிங்கம் படத்தை எடுக்க முன் வந்தேன். அறம் படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்தார்கள். நான் சின்ன வயதில் இருந்தே சினிமாவை பார்த்து வளர்ந்தவன். எங்க அப்பா பெரிய கருப்பு தேவர் பிரபலமான நடிகர். நிறைய நாடகங்கள், சினிமாவில் என பல படங்களில் நடித்தார். அவரை பார்த்து வளர்ந்ததால் எனக்கு சினிமா மீது பெரிய ஆர்வம் வந்தது. நான் சினிமாவுக்கு வந்தது காரணமே அப்பா தான். அப்பா கிட்டத்தட்ட 53 வருடமாக சினிமாவில் இருந்தார். நிறைய குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். ஆனால், அவரால் சாதிக்க முடியவில்லை.

க/பெ ரணசிங்கம் படம் உருவான விதம்:

அவர் சாதிக்காததை நான் சாதிக்கணும் என்று ஆசைப்பட்டார். அப்படி தான் க/பெ ரணசிங்கம் படத்தை எடுத்தேன். க/பெ என்பதன் பொருள் கணவர் பெயர். முதலில் இந்த படம் எடுக்கும் போது எல்லோரும் ஜாதி படம் எடுக்கிறீர்களா? என்று கேட்டார்கள். நிச்சயமாக இது ஜாதி படம் இல்லை. ராமநாதபுரம் பகுதி மக்களின் போராட்டம் பிரச்சினைகளைப் பற்றி தான் நான் படத்தில் சொல்லிருந்தேன். அங்கிருக்க மக்கள் அன்றாடம் தண்ணீருக்காக பெரிய போராட்டத்தையே சந்தித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த ஊரில் தான் நான் தங்கியிருந்த ஹோட்டல் இருந்தது. அங்கு வாய் கொப்பளிக்க தண்ணீரை எடுத்து பயன்படுத்தினேன். வாய் புண்ணாகி விட்டது. கடல் தண்ணீரை தான் அந்த ஊர் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அறம் படம் முழுக்க ராமநாதபுரம் ஏரியாவில் தான் எடுத்தார்கள்.

தண்ணீர் பிரச்சனையை வைத்து கதை பண்ண காரணம்:

அந்த படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் எனக்கு இந்த பிரச்சனை எல்லாம் தெரிய வந்தது, அப்படித்தான் இந்த படம் பண்ணலாம் என்று முடிவு செய்தேன். நம்முடைய நாட்டின் தலையாய பிரச்சனை தண்ணீர் தான். இந்தப்படம் அதைப் பற்றி தான் பேசுகிறது. பெரும்பாலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாமே ராமநாதபுரம் மக்களின் பெயரைத்தான் வைத்திருந்தோம். படம் நாங்கள் நினைத்ததை விட நன்றாக வந்திருந்தது. மக்களும் அதை கொண்டாடினார்கள். அப்பாவுக்கு சினிமா துறையில் நல்ல பெயர் இருக்கிறது. நான் படம் எடுக்கும்போது அவரைப் பாட வைத்து நடிக்க வைக்கணும் என்று ஆசை இருந்தது. ஆனால், அப்பா உயிரோடு இல்லை. அவர் இறந்து பல வருடங்கள் ஆனாலும் அவருடைய நினைவுகள் நீங்கவில்லை. பெரும்பாலும் அப்பாவுடைய வேட்டியை கட்டிக்கொண்டு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போவேன் என்று கூறியிருந்தார்.

Advertisement