சீக்ரெட் ரூமும் இல்ல ஒன்னும் இல்ல – பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஜோவிகா.

0
248
Jovika
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகளும் ஒருவர். வனிதாவிற்கு எந்த அளவிற்கு விமர்சனம் இருந்ததோ அதே அளவு ஜோவிகாவிற்கும் பல விமர்சனங்கள் குவிந்துகொண்டு தான் வருகிறது. அந்த வகையில் ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார்.

- Advertisement -

இதனால் சமூக வலைதளத்தில் ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகிறார். என்னதான் ஜோவிகா ட்ரோல்களுக்கு உள்ளானாலும் விமர்சனம் என்ற பெயரில் தனது மகளுக்காக தொடர்ந்து முட்டு கொடுத்து வருகிறார் வனிதா. பிக் பாஸ் வீட்டில் சாப்பிடுவது, தூங்குவது என்று இருந்தாலும் இதுவரை ஜோவிகா ஒரு சில வாரங்களில் மட்டுமே நாமினேட் ஆகி இருந்தார். ஆனால், அப்போதும் இவரை விட டம்மியாக இருந்த மிக்ஸர் போட்டியாளர்கள் வெளியேறினார்கள்.

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஜோவிகா இடம்பெற்று இருந்தார். ஆனால், விக்ரமும் இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்ததால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த பல்வேறு தனியார் ஓட்டிங்கில் விக்ரமை விட ஜோவிகாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவ்வாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ஜோவிகா இந்த வாரம் வெளியேறியதாக சில நம்ப தகுந்த வட்டாரங்களில் தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் ஜோவிகா சீக்ரெட் ரூமில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதனால் உண்மையில் ஜோவிகா, சீக்ரெட் ரூமில் வைக்கப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன் நிறைவடைந்து இருக்கிறது. இதில் முதல் மூன்று சீசனில் மட்டும் தான் இந்த சீக்ரெட் ரூம் பயன்படுத்தப் பட்டது

முதல் சீசனில் சுஜா, இரண்டாம் சீசனில் வைஷ்ணவி, மூன்றாம் சீசனில் சேரன் என்று மூன்று முறை மட்டும் தான் இந்த சீக்ரெட் ரூம் உபயோகிக்கப்பட்டது. கடந்த மூன்று சீசன்களாக இல்லாத சீக்ரெட் ரூம் இந்த சீசன் பயன்படுத்தப்பட்டால் அது ஜோவிகாவிற்கு பிக் பாஸ் கொடுக்கும் சலுகை என்று பலர் கூறி வந்தார்கள். ஆனால், ஜோவிகாவிற்கு எந்த சீக்ரெட் ரூமும் கொடுக்கப்படவில்லை. அவர் நேரடியாக வெளியேற்றப்பட்டு இருகிறார்.

Advertisement