தென்னிந்திய சினிமா உலகில் ஒரு கால கட்டத்தில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீரா வாசுதேவன். தற்போது இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். நடிகை மீரா வாசுதேவன் பூர்விகம் மலையாளம். ஆனால், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவர் “கோல்மால்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானர். பிறகு இவர் “உன்னை சரணடைந்தேன்” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். இந்த படம் மிகப் பெரிய அளவு வெற்றியும் பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகை மீரா வாசுதேவன் அவர்கள் அறிவுமணி, ஜெர்ரி, கத்தி கப்பல்,ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கொடுக்க வில்லை. பின் சினிமா உலகிலும் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் நடிகை மீரா வாசுதேவன் அவர்கள் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் என்பவரை காதலித்து 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளுக்குள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இதையும் பாருங்க மேக்கப் இல்லதான். ஆனால், போன்ல பியூட்டி மோட ஆப் பண்ணுங்க. அஞ்சலியை கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்.
பின்னர் மலையாள நடிகர் ஜான் கோகன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். அவரிடமும் ஓரிரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது மும்பையில் தன் மகளுடன் வசித்து வருகிறார். பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது துணை கதாபாத்திரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை மீரா வாசுதேவன். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார் நடிகை மீரா வாசுதேவன்.
அதில் அவர் கூறியது, என்னால் சினிமா உலகில் நல்ல இடத்தை பிடிக்க முடியாமல் போனதற்கு என்னுடைய மேனேஜர் தான் காரணம். மலையாளத்தில் நான் நடித்த தன்மந்த்ரா படம் மிக பெரிய அளவு வெற்றி பெற்றது. இதன் பிறகு எனக்கு சினிமா உலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார். அதனால் படம் ஹிட்டாக அமைந்தது என்றும் சொல்லலாம். இதையடுத்து எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. எனக்கு மொழி பிரச்சினை இருந்ததால் நான் எனது மேனேஜரை முழுமையாக நம்பினேன். அவர் எனக்கு உதவி செய்வார் என்று நினைத்தது தான் என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு.
அவரின் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு எண்ணை பயன்படுத்தி விட்டார். அவருடைய பேச்சைக் கேட்டு நான் கதைகூட கேட்காமல் கால்சீட் கொடுத்த பல படங்கள் நடித்தேன். நான் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தது. அதற்குப் பின்னால் தான் எனக்கு தெரிந்தது, எனக்கு வரும் நல்ல வாய்ப்புகளையெல்லாம் மற்ற நடிகைகளுக்கு கொடுத்து வருகிறார். அப்போது நான் முன்பு இருந்ததால் அவர் சொல்வதெல்லாம் சரி என நினைத்துக் கொண்டு செய்தேன். இதனால் எனக்கு தெரியாமல் போனது என்று மன வேதனையுடன் கூறினார்.