ஆதிபுரூஸ் படக்குழுவை விளாசி உயர்நீதிமன்றம் நீதிபதி கேட்டிருக்கும் கேள்வி தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. தற்போது பான் இந்தியா படமாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ்.
ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை. ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை தற்போது எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமானது. மேலும், இப்படத்தை ஓம் ராவத் இயக்க தயாரிப்பாளர் புஷன் குமார் தயாரித்து இருக்கிறார்.
ஆதிபுருஷ் திரைப்படம்
மேலும், இந்த ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். ராமனாக பிரபாஸும் , சீதையாக கிருதி சனோனும், ராவணனாக சயீப் அலி கான் நடித்திருக்கிறார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. அதோடு இந்த படத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவுகளை போட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் படத்தினுடைய கிராபிக்ஸ் ரொம்ப மோசமாக இருக்கிறது எல்லாம் விமர்சனம் செய்திருந்தார்கள்.
கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்
மேலும், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கடிதம் எழுதி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மீது வழக்கும் தொடர்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆதிபுரூஸ் படத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இதை விசாரித்த நீதிபதி கூறியிருப்பது, ராமாயணம் என்பது எல்லோருக்குமே ஒரு முன் உதாரணம். மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் ராமாயணத்தை தான் படிக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சரியமான ஒன்று. அனுமன், சீதையும் முக்கியமில்லாதவர்களாக படத்தில் காண்பித்து இருக்கிறார்கள்.
ஆதிபுருஷ் படத்தின் மீது வழக்கு
இது மாதிரியான விஷயங்கள் ஆரம்பத்திலேயே நீக்கி இருக்க வேண்டும். சில காட்சிகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்ப்பதாக இருக்கிறது. இதை பார்க்க சென்சார் செய்ய தணிக்கை வாரியம் ஏன் தவறியது? சொலிசிடர் ஜெனரல் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால், காட்சிகளை என்ன செய்வது? இது தொடர்பாக தணிக்கை வாரியத்திடம் கேள்வி கேளுங்கள். நாங்கள் செய்ய வேண்டியதை செய்கிறோம். ஒரு வேளை இந்த படம் தடை செய்யப்பட்டால் மக்களுக்கு கொஞ்சம் மாறுதல் கிடைக்கும் என நம்புகிறேன்.
நீதிபதி போட்ட உத்தரவு
படத்தில் பல சர்ச்சைகளை வைத்துக்கொண்டு பொறுப்பு துறப்பு பதிவிட்டிருந்தோம் என்று பட குழு தரப்பு வாதாடுவது வினோதமாக இருக்கிறது. நீங்கள் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது இராமாயணம் அல்ல என்று பொறுப்பு திறப்பு வாசகம் போடுவீர்கள். அதை நாட்டு மக்களும் இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளை இல்லாதவர்கள் என்று நினைக்கிறீர்களா? அது மட்டும் இல்லாமல் ஏன் விசாரியின் போது தயாரிப்பாளர், இயக்குனர்கள், படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் யாருமே ஆஜராகவில்லை. உடனடியாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு போட இருக்கிறது