தமிழ் சினிமா உலகில் பிரபலமான பாடகியாக இருந்தவர் உமா ரமணன். இவர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ்த்திறவாய் என்ற பாடலின் மூலம் தான் திரை உலகில் அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து இவர் பன்னிர் புஷ்பங்கள் படத்தில் இடம் பெற்று ஆனந்த ராகம், ஆகாய வெண்ணிலாவே, நீ பாதி நான் பாதி, பூபாலம் இசைக்கும், பூமகள் ஊர்வலம் போன்ற ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். மேலும், இவர் எம் எஸ் வி, இளையராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார்.எங்களுக்கும் வாடகை குடுக்கணும், EMI கட்டணும் எல்லாம் இருக்கு
அதுமட்டுமில்லாமல் விஜய் – திரிஷா நடிப்பில் வெளியாகியிருந்த திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு என்ற பாடலையும் இவர் தான் பாடி இருந்தார். ஒரு காலத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதற்கு பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த உடன் இவர் மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். இதனிடையே இவர் பாடகர் ரமணன் என்பவரை திருமணம் செய்தார். ரமணனும் பிரபல பின்னணி பாடகர் ஆவார். இவர் ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளில் பாடியிருக்கிறார்.
உமா ரமணன் குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். குறிப்பாக, சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ரமணன் இருந்தார். இதன் மூலம்தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். அதற்குப் பிறகு இவர் பல இசைக்கச்சேரிகளில் தான் பாடி வந்தார். மேலும், சென்னை அடையாரில் தான் உமா ரமணன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உமா உடல்நிலை சரி இல்லாமல் அவஸ்தை பட்டு இருந்தார்.
உமா ரமணன் இறப்பு:
இப்படி இருக்கும் நிலையில் நேற்று காலை உமா இறந்து விட்டார். தற்போது இவருக்கு 69 வயது. இவருடைய மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய இறுதி சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவருடைய வீட்டில் இன்று மாலை நடைபெற்று இருக்கிறது. அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாடகி உமா ரமணன் இறப்பு குறித்து கங்கை அமரன் பேட்டியில் கூறியிருப்பது, உமா ரமணன் சிறந்த பாடகி. நாங்கள் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்னாடி லைப் மியூசிக் செய்து கொண்டிருந்த கட்டத்தில் உமாரமணன் நம்பர் 1 உச்சத்தில் இருந்தார்கள்.
கங்கை அமரன் பேட்டி:
நிறைய கச்சேரிகள் எல்லாம் செய்திருந்தார்கள். யாருப்பா இவங்க ரொம்ப சூப்பரா பாடுறாங்களே என்று சொல்லி அவங்க குரலை அப்படியே ரசித்தோம். பின்பு சினிமாவில் எங்களோட வளர்ச்சி வந்த பிறகு உமாவை பாட வைக்கலாமே என்று இளையராஜா அண்ணனுக்கு ஐடியா வந்து அதற்குப் பின்னர் பாட வைத்தார். ஏற்கனவே உமா ரமணன் குரல் பரிச்சியம் என்பதாலும் தனித்துவமாக இருந்ததாலும் அண்ணன் தொடர்ந்து அவருக்கு பாடல் வாய்ப்பை கொடுத்தார். எந்தக் குறையும் தவறுமே கண்டுபிடித்து சொல்ல முடியாத அளவுக்கு தெளிவான குரல், தமிழ் உச்சரிப்பு எல்லாமே சுத்தமாக இருக்கும்.
உமா குறித்து சொன்னது:
ஸ்டுடியோக்கு வரும்போதுதான் அவரிடம் பழக்கம். மற்றபடி பெரிசாக எங்களுக்கு தொடர்பு இல்லை. நான் ரசித்த குரல்களில் முக்கியமான குரல். உமா இழப்பு தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு. இடையிலாவது அவரை நேரில் சந்தித்திருக்கலாமோ என்று எனக்கு தோணுது. நான் வெளியூரில் இருப்பதால் என்னால் உமாவுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியவில்லை. அது ரொம்ப கஷ்டமாக இருக்கு. அதே மாதிரி உமா ரமணன் மறைவுக்குப் பிறகு அவர்களுடைய பாடல்களை பாராட்டுகிறோம், கொண்டாடுகிறோம். முன்னாடியே அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்திருக்கலாமே என்ற வருத்தம் என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.