கை கால்கள் செயலிழந்த நிலையில் நானும் ரௌடி தான் நடிகர். பண உதவி கேட்ட நடிகர்.

0
56412
Lokesh-pop

பொதுவாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சமீப காலமாக காமெடி நடிகர்கள் பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற வண்ணம் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் லோகேஷ் என்பவரும் ஒருவர்காமெடிக்கு என இருக்கும் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் லோகேஷ் பாப். இவர் இந்த காமெடி தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஆதித்யா மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மத்தியில் பிரபலமானவர் லோகேஷ் பாப்.

Image result for mokkai of the day jokes

- Advertisement -

ஆத்தியா டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த படம் நானும் ரவுடி தான். இந்த படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருந்தார். அந்த காமெடி சீன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதன் பின்னர் லோகேஷ் பாப் ஒரு சில படங்களில் கூட நடித்திருக்கிறார். சமீப காலமாக ஆதித்யா தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்தார்.

இதையும் பாருங்க : பிரிகிதா பதிவிட்ட புகைப்படத்தின் மூலம் உறுதியானது மாஸ்டர் படத்தில் வரும் கல்லூரியின் பெயர்.

-விளம்பரம்-

இந்நிலையில் காமெடி நடிகர் லோகேஷ் பாப் அவருக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் குணம் ஆக 7 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இதனால் பலரின் ஆதரவையும் உதவியையும் நாடி உள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. சரவணகுமார். இவர் இதற்கான பண உதவியை பேஸ்புக் மூலம் கேட்டு உள்ளார்.

மேலும், தற்போது அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சையும் செய்யப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் லோகேஷ் பாப்பின் இந்த நிலைமையை கண்டு பல பேர் சோகத்தில் உள்ளார்கள்.இவருக்கு பணம் உதவி கிடைத்து மீண்டும் நல்ல படி திரும்பி வர வேண்டும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Advertisement