பிரிகிதா பதிவிட்ட புகைப்படத்தின் மூலம் உறுதியானது மாஸ்டர் படத்தில் வரும் கல்லூரியின் பெயர்.

0
44277
bragida
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூபில் ஒளிபரப்பான ‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும், இந்த ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸ்க்கு என எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். அதோடு இந்த ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார் பிரிகிதா. குறுகிய காலத்திலேயே இவருக்கு என்று சமூக வளைத்தளத்தில் பல்வேறு ஆர்மிக்கள் கூட துவங்கியது. அது மட்டுமல்லாமல் இவருக்கு விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

-விளம்பரம்-

முதல் படமே தளபதி விஜயின் படம் என்பதால் கடும் சந்தோஷத்தில் இருந்து வருகிறார் நடிகை பிரிகிதா. மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்தப் படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் ஒன்றின் பின் ஒன்றாக சமூகவலைதளத்தில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது மேலும் இந்தப்படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் கல்லூரி மாணவர்களின் தலைவராக நடிக்கிறார் என்றும் பல்வேறு விதமான யோகங்கள் சென்று கொண்டுதான் இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : சின்னத்திரை நயன்தாரா,வாணி போஜன்னு தெரியும். சின்னத்திரை திரிஷா இவங்க தானாம்.

ஆனால் இந்தப்படம் கல்லூரியில் நடக்கும் ஒரு கதை என்பது மட்டும் நம்மால் உறுதியாக சொல்ல முடியும். இந்த நிலையில் இந்த படத்தில் வரும் கல்லூரியின் பெயர் என்ன என்பது நடிகை பிரிகிதா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் பிரிகிதா புகைப்படம் ஒன்று சமூக இணையதளத்தில் வெளியானது அதில் அவர் கல்லூரியின் ஐடி கார்ட் அணிந்தவாறு இருக்கிறார். அந்த ஐடி கார்டில் ‘JEFFERY’S College Of Arts And Science ‘ என்ற கல்லூரியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Image result for Master Vijay

எனவே மாஸ்டர் படத்தில் இவரும் கல்லூரியின் பெயர் இதுதான் என்பது உறுதியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாஸ்டர் படப்பிடிப்பில் பிரிகிதா, இதே உடையில் மாளவிகா மோகனுடன் இருக்கும் ஒரு புகைப்படமும் லீக் ஆனது வெளியானது. மேலும் குட்டி ஸ்டோரி பாடல் வெளியான போது அதில் இடம்பெற்ற விஜயின் ஒரு புகைப்படத்தில் கூட விஜய் அணிந்திருக்கும் ஐடி கார்டு இதே கல்லூரியில் பெயர்தான் இடம் பெற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.எனவே, மாஸ்டர் படத்தில் வரும் கல்லூரியின் பெயர் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement