நல்ல வேல இதெல்லாம் படத்துல வரல. ஆத்திய வர்மா படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்.

0
91649
Adhithya-varma

தமிழ் சினிமாவில் பல மொழி படங்கள் ரீமேக் ஆகுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தை தமிழில் ரீமேக் செய்து “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் வெளியாகி உள்ளது. ஆனால், முதலில் இந்த படத்தை இயக்குனர் பாலா அவர்கள் வர்மா என்ற பெயரில் படத்தை உருவாக்கினார். பின் பல பிரச்சனைகள் காரணமாக இந்த வர்மா படம் முற்றிலும் நின்று விட்டது. பின்னர் இயக்குனர் கிரிசாயா என்பவர் ஆதித்ய வர்மா படத்தை இயக்கினார். மேலும், ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு ரதன் என்பவர் இசையமைத்து உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், ஆதித்ய வர்மா படம் குறித்து சினிமா வட்டாரத்தில் மட்டும் அல்லாமல் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, ஹிந்தியில் ‘கபீர் சிங்’ என பல மொழிகளில் வெளியான படத்தை தமிழில் ரீமேக் செய்து உள்ளார்கள். பல மொழியில் ரீமேக் செய்யப்பட்டு ஓடிய படம் ஆகும். ஆனால், இந்த படம் வெளியே வந்தவுடன் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை. அதோடு ரசிகர்கள் எதிர்பார்ப்பு வீணாகி விட்டதே என்று சொல்லலாம்.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். இது இவருடைய முதல் படம் ஆகும். ஆனால், இது இவருடைய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. அர்ஜுன் ரெட்டி படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஆதித்யா வர்மா படம் கொஞ்சம் ஏமாற்றம் தான். ஏன்னா, கதையில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் அப்படியே அர்ஜுன் ரெட்டியை ரீமேக் செய்து இருந்தார்கள். இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் நிலவியது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் சில சர்சைகளையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

இதனாலேயே இந்த ஆதித்ய வர்மா படம் வந்த வேகத்திலேயே திரும்பி சென்று விட்டது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தில் ரொமான்ஸ்களுக்கும், முத்த காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை. அந்த அளவிற்கு அதிகமாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் சென்சார் செய்யப்படாத காட்சிகளை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் ஆதித்ய வர்மா படத்தின் ஹீரோ துருவ் விக்ரம். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அதோடு இந்த மாதிரி சென்சார் செய்யப்படாத காட்சிகளை வெளியிடுவதன் மூலம் என்ன பலன் கிடைக்குமோ?? என்றும் வினவுகின்றனர்.

Advertisement