அஜித் படத்தில் அருவி நாயகி – வைரல் புகைப்படம்

0
1159

சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் அருவி. இந்த படத்தின் நாயகியான அதிதி பாலன் பலருக்கும் புது முகம் போல தெரியலாம். ஆனால் இவர் உண்மையில் புது முகம் கிடையாது. இதற்கு முன்பு சிறு வேடங்களில் இவர் சில படங்களில் நடித்துள்ளார்.

Aditi Palan

- Advertisement -

சமீபத்தில் அதிதி பாலன் அளித்த பேட்டி ஒன்றில், தான் சினிமாவிற்கு புதிதல்ல என்றும் இதற்கு முன்பு ரஜினி படம் ஒன்றில் கூட நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இவர் ரஜினி படத்தில் மட்டும் அல்ல தலையின் படத்திலும் நடித்துள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படத்தில் இவர் திரிஷாவிற்கு தோழியாக நடித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:
விக்ரமின் சாமி 2 எப்போ ரிலீஸ் தெரியுமா ? வெளியானது தகவல்

-விளம்பரம்-

அந்த படத்தின் புகை படம் தற்போது சமூக வலயத்தளங்களில் வைரலாகி உள்ளது. சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர் அருவி படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

Advertisement