இயக்குனர் ஷங்கர் மகளை நடிகை ஆத்மிகா மறைமுகமாக தாக்கி இருந்த நிலையில் தற்போது Nepotism குறித்து பதில் அளித்து இருக்கிறார் அதிதி ஷங்கர். தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தியின் விருமன் ஓடத்தில் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார்.
கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ சிம்புவின் ‘கொரோனா குமார்’ போன்ற படங்களில் அதிதி கமிட் ஆகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஆத்மீகா தனது ட்விட்டர் பக்கத்தில் சிலருக்கு வாய்ப்புகள் ஈசியாக கிடைத்து விடுகிறது. மற்றவர்களின் நிலைமை, பார்த்துக்கலாம் என்று பதிவிட்டு இருந்தார். ஆத்மிகாவின் இந்த பதிவை கண்ட பலரும் அதிதியை குறிப்பிட்டு தான் ஆத்மிகா இப்படி பதிவிட்டு இருக்கிறார் என்று கூறி வந்தனர்.
வாரிசு நடிகர்கள் குறித்து அதிதி :
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதிதி ஷங்கரிடம் Nepotism குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அதிதி ‘என் முதல் படம் வேண்டுமானால் அப்பா மூலமாக கிடைத்திருக்கலாம். ஆனால், சினிமாவில் எனக்கான ஒரு இடத்தை உருவாக்குது என்னுடைய கையில் தான் இருக்கிறது என்று நம்புகிறேன். எந்த வாரிசு நடிகர்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் சரக்கு இல்லை என்றால் ரசிகர்கள் அவர்களை தூக்கி எறிந்து விடுவார்கள்.
திறமை தான் முக்கியம் :
மேலும், முதல் படத்திற்கு மட்டுமே ஒருவரின் அப்பா உதவ முடியும். ஆனால், சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் தனித்திறமை இருக்க வேண்டும் என்பது அவசியம். முதல் படமே எனக்கு கிராமத்து கதை கொண்ட படமாக அமைந்து இருந்ததால் நடிப்பதற்கு எனக்கு நிறைய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது என்று நம்புகிறேன்.அந்த நம்பிக்கை வீண் போகவில்லை’ என்றும் கூறியுள்ளார்.