சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் – அமலா பாலுக்கு பதில் அதிதி. டோலிவுட்டிலும் நெபோடிசமா ?

0
2067
AmalaPaul
- Advertisement -

ராட்சசன் 2வில் அதிதி சங்கர் நடித்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

-விளம்பரம்-

தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். மேலும், இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் நடிகையாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

- Advertisement -

அதிதி நடித்த முதல் படம்:

மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். விருமன் படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருந்தது. இந்த படத்தின் மூலம் தான் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருந்தார். அதோடு இவர் இந்த படத்தில் பாடல் ஒன்றும் பாடிஇருக்கிறார். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் மூலம் அதிதிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

மாவீரன் படம்:

தற்போது இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற படத்தில் அதிதி நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ராட்சசன் படம்:

இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் அதிதி சங்கர் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல இயக்குனர்கள் அதிதி சங்கரிடம் கதை சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் ராட்சசன் 2 படத்தில் அதிதி சங்கர் நடிக்க உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”.

ராட்சசன் 2 படத்தில் அதிதி:

இந்த திரைப்படத்தில் அமலா பால், காளி வெங்கட், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தினுடைய சூட்டிங் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் ராட்சசன் 2 படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க இருக்கிறார். தற்போது இவர் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அதர்வா தம்பி ஆகாசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த உடனே ராட்சசன் 2 படத்திலும் கமிட்டாக இருக்கிறார்.

நெப்போடீஸமா ?

அதற்கான கால்ஷீட் அதிதி கொடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருவதால் பாலிவுட்டை போல டோலிவுட்டிலும் வாரிசு அரசியல் துவங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்ததுள்ளது. ஏற்கனவே விருமன் படத்தில் சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஒரு பாடலை பாடி இருந்தார். ஆனால், அவர் பாடிய அதே பாடலை அதிதி பாடி இருந்தார். ஆனால், அதிதி பாடிய பாடல் தான் படத்தில் இடம்பெற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement