தென்னிந்திய சினிமாவில் டாப் 10 பணக்கார நடிகர்கள் – இதுலயும் இவர் தான் முன்னிலை.

0
1864
Kollywood
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் டாப் 5ல் இருக்கும் பணக்கார நடிகர்கள் குறித்த லிஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற பல மொழிகளில் டாப் நடிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ் சினிமாவில் டாப் முன்னணி நடிகர்கள் லிஸ்ட் எடுத்தால் முதலில் ரஜினி, விஜய், அஜித் தான் வருவார்கள்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு இவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய படங்கள் என்றாலே திரையரங்களில் கூட்டம் அலைமோதும். அதோடு படம் எப்படி இருக்கோ இல்லையோ ஆனால் இவர்களுக்காகவே படத்தை ரசிகர்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார்கள்.
அதேபோல் தென்னிந்திய சினிமா நடிகர்கள் பட்டியல் எடுத்தாலும் ரஜினி, விஜய், அஜித் உடைய பெயர் வந்துவிடும்.

- Advertisement -

பணக்கார நடிகர்களின் பட்டியல்:

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகர்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதாவது, தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்று பார்த்தால் ரஜினி, விஜய், அஜித் என்று சொல்லலாம். ஆனால், இவர்களைவிட குறைவாக சம்பளம் ஆகும் நடிகர் ஒருவர் தான் பணக்கார பட்டியலில் டாப்பில் இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை, தெலுங்கு சினிமா நடிகர் நாகார்ஜுனா தான். தெலுங்கு சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் நாகார்ஜுனா.

நாகார்ஜுனா:

இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் கோலிவுட், பாலிவுட் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 3 ஆயிரம் கோடி இருக்கிறது. இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் அன்னபூர்ணா பிலிம் ஸ்டுடியோவில் பார்ட்னராக இருக்கிறார். ஹைதராபாத்தில் மீடியா ஸ்கூல், கன்வென்ஷன் சென்டர், டிவி சேனல் என்று பல தொழில்களில் முதலீடு செய்து இருக்கிறார். இதனால்தான் இவருக்கு இவ்வளவு சொத்து மதிப்பு என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

வெங்கடேஷ்:

டோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் வெங்கடேஷ். இவர் இதுவரை தெலுங்கில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கு மொழயில் மட்டும் இல்லாமல் தமிழ் மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பணக்கார நடிகர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இவருக்கு 2200 கோடி சொத்து மதிப்பு.

சிரஞ்சீவி:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிரஞ்சீவி. ‘மெகா ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் வெளிவந்த பட்டங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் பணக்கார நடிகர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இவருக்கு 1650 கோடி சொத்து மதிப்பு.

ராம் சரண்:

தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் பணக்கார நடிகர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் இருக்கிறார். இவருக்கு 1370 கோடி சொத்து மதிப்பு.

மற்ற நடிகர்கள் சொத்து விவரம்:

இவர்களை அடுத்து 5வது இடத்தில் ஜுனியர் என்.டி.ஆர். இவருக்கு ரூ. 450 கோடி சொத்து. 6வது இடத்தில் விஜய். இவருக்கு ரூ. 445 கோடி சொத்து. 7வது இடத்தில் ரஜினிகாந்த். இவருக்கு ரூ. 430 கோடி சொத்து. எட்டாவது இடத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஒன்பதாவது இடத்தில் மோகன்லால் இருக்கிறார்கள். பத்தாவது இடத்தில் ரூ. 388 கோடி சொத்துடன் கமல்ஹாசன் இருக்கிறார்.

Advertisement