சிலிண்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு – எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா ?

0
1085
- Advertisement -

இந்திய மக்களின் வாழ்வில் இணைந்து பிரிக்க முடியாத ஒன்றாக சிலிண்டர் மற்றும் பெட்ரோல் இருந்து வருகிறது. சில மாதங்களாக உயர்ந்து வந்த சிலிண்டர் விலை தற்போது வணிக சிலிண்டரின் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. சிலிண்டர்களின் விலையேற்றம் தான் இந்தியாவின் முக்கிய பேசு பொருளாக இருந்து வந்தது. இன்று குறைக்கப்பட்ட வணிகப்  பயன்பட்டிற்க்கான சிலிண்டர் விலை குறைந்து இந்திய மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

சிலிண்டர்களின் வகை:  

தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்களின் வீடுகளில் சமையல் வீட்டு பயன்பட்டிற்க்கான கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப் பட்டு வருகிறது. வீட்டு பயன்பாட்டிற்க்கான கேஸ் சிலிண்டர்களின் விலையை காட்டிலும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப் படும் சிலிண்டரின் விலை சற்று உயர்வாக தான் இருந்து வருகிறது. வணிக பயன்பட்டிற்க்கான சிலிண்டர்கள் 5 ஸ்டார் ஹோட்டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெற்று கொள்ளலாம். குடும்பத்திற்கு அதற்க்கு மேல் சிலிண்டர்கள் தேவைபட்டால் மானிய விலையில் அல்லாமல் சந்தையின் விலையில் அவர்கள் பெற்று கொள்ளலாம். அமெரிக்க டாலர்க்கு நிகரான இந்திய ரூபாயின் பரிமாற்றத்திற்கு ஏற்றவாறு பெட்ரோலிய பொருட்களுக்கான அளவீடுகள் ஆகியவை தான் இந்தியாவின் சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செயப்பட்டு வருகிறது.   

சிலிண்டர்களின் விலை

சென்னை இந்த ஆண்டு தொடக்கத்தில் வணிக பயன்பட்டிற்க்கான சிலிண்டரின் விலை 1,917 ரூபாயாக இருந்து வந்தது. அதன் பின் மார்ச் மாதத்தில் 351 ருபாய் உயர்த்தப்பட்டு 2,268 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதற்கு பிறகு தொடர்ந்து ஏப்ரல் மாதம் 76 ரூபாயும், மே மாதம் 171 ருபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜூன் மாதம் 84 ரூபாய் அதிகரித்த நிலையில் ஜூலை மாதம் 8 குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சமையல் சிலிண்டர்களின் விலையானது மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தற்போது வணிகப்  பயன்பட்டிற்க்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இருப்பினும் வீட்டு பயன்பட்டிற்க்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ 1,118 இருந்து வருகிறது. வர்த்தக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ 92.50 காசுகள் குறைக்கப்பட்டு ரூ 1,945 விலையில் இருந்து ரூ 1,852.50 விலையாக எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வணிக சிலிண்டரின் விலை 1850 ரூபாயை தொட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வணிக சிலிண்டரின் விலை 1831 ரூபாயாக இருந்தது கூறிப்பிடதக்கது.              

Advertisement