3 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன். அதுவும் இந்த ஹீரோவுடன்.

0
90433
Lakshmi-menon
- Advertisement -

தென்னிந்திய திரையுலகில் இளம் புயலாக வந்த நடிகை லட்சுமி மேனன். தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

-விளம்பரம்-

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். ஆரம்ப கால கட்டத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த லட்சுமி மேனன் கொஞ்சம் மாடர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அது அவருக்கு செட் ஆகாததால் சினிமா பட வாய்ப்புகள் இவருக்கு குறையத் துவங்கின.

- Advertisement -

இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார். நடிகை லட்சுமி மேனன் சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு பிறகு நடிகை லட்சுமி மேனன் தற்போது மீண்டும் சினிமா உலகிற்கு வருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக்க்கு ஜோடியாக நடிக்க லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

ஏற்கனவே நடிகை லக்ஷிமி மேனன் அவர்கள் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக கொம்பன் படத்திலும், சசிகுமார் ஜோடியாக குட்டிப்புலி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கவுதம் கார்த்திக் மற்றும் லட்சுமி மேனன் சேர்ந்து நடிக்கும் படம் சிப்பாய்.

அதுமட்டுமில்லாமல் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் தேவராட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். மீண்டும் ஒரு புதிய படத்தில் அவருடன் இணைகிறார். கௌதம் கார்த்திக் மற்றும் லட்சுமி மேனன் நடிக்கும் இந்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எல்லாம் சந்தோஷத்தில் உள்ளார்கள்.

Advertisement