சினிமா நடிகைகள் என்றாலே அவர்கள் திருமணத்தை பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. மேலும் காதலிலும் பெரிதாக நாட்டம் கொள்வதுமில்ல.அந்த வரிசையில் தமிழ்,தெலுகு, ஹிந்தி,போன்ற பல படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் இது வரை எந்த ஒரு கிசுகிசுகளிலோ ,காதல் வலைகளிலோ சிக்கியதில்லை.
இவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு 5 வருடங்களுக்கு முன்பே திருமணமாகிவிட்டது, ஆனால் 32 வயதாகும் இவர் இதுவரை யாரையும் காதலித்ததும் இல்லை திருமணம் பற்றி பேசியதும் இல்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் காஜலிடம் இதுவரை யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு காஜல் ஆம் இதுவரை இருண்டு பேரை காதலித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து காஜல் கூறுகையில் நான் சினிமா துறைக்கு வரும் முன்பே ஒருவரை காதலித்தேன் அதன் பின்னர் நடிகையான பிறகு ஒருவர் மீது காதல் எண்ணம் தோன்றியதாக கூறினார். பின்னர் சினிமா துறையில் இருந்துகொண்டு காதலிப்பது என்பது மிகவும் கடினம்.காதலித்தால் அதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். காதலர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டும். சந்திக்க கூட நேரம் ஒதுக்க முடியாவிட்டால் காதலித்து என்ன பயன் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது வீட்டில் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் ஆனால் எனக்கு இப்போதைக்கு திருமணம் பற்றி சிந்தனை வந்ததில்லை. இப்போதைக்கு எனக்கு நடிப்பதில் மட்டுமே ஆர்வம் உள்ளது அதனால் மேலும் மேலும் பல வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று காஜல் தெரிவித்தார்.