‘ஆமாம் நான் காதலிக்கிறேன்’ – தனுஷ் பிரிவிற்கு பின் மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

0
1059
Aishwarya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் உடைய மூத்த மகள் ஐஸ்வர்யா. இவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட்,டோலிவுட்,பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். இதனிடையே தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியருக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இருவரும் தாங்கள் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை வலைதள அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. 18 ஆண்டுகால திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக உள்ளது.

- Advertisement -

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:

இவர்களின் இந்த பிரிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிரிவிற்கு பின் தனுஷ் அவர்கள் வாத்தி, நானே வருவேன் போன்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். அதே போல் ஐஸ்வர்யாவும் தனிக்குழு உடன் இயக்கும் இசை ஆல்பத்தில் பிசியாக வேலை செய்து வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா தன்னுடைய ஆல்பம் சாங் இயக்கும் குழுவுடன் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவிற்கு பிறகு நடந்தது:

அது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில வாரங்களுக்கு முன்பு கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யவில்லை. இதனால் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா அளித்த பேட்டி:

நேற்று கூட தனுஷ் தன்னுடைய மகன் யாத்ரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா பிரபல பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் காதல் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஐஸ்வர்யா அவர்கள் கூறியிருப்பது, காதல் ஒரு பொதுவான உணர்வு. ஒரு ஆளுக்கு அவரின் தனிப்பட்ட விஷயத்துக்கும் தொடர்பில்லை. நான் என் தந்தையை நேசிக்கிறேன். நான் என் அம்மாவை நினைக்கிறேன்.

வைரலாகும் ஐஸ்வர்யா அளித்த பேட்டி:

நான் என் குழந்தைகளை நேசிக்கிறேன். எனவே அன்பை ஒரு தனிமையில் கட்டுப்படுத்தக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆம், நான் காதலிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இன்னும் ஐஸ்வர்யா தனுஷை காதலிக்கிறாரா? இவர்கள் இருவரும் சேர்வார்களா? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Advertisement