ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனுக்கு இடையே விரிசல் ஏற்பட காரணம் ஆன நடிகை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் பிரிவு குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் இன்னும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேலும், இவர் 22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் விவகாரம்:
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் உலவி வந்தது. அதன் பின் இருவருமே ஜோடியாக இருந்த புகைப்படம் வந்தவுடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருவரும் சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தார்கள். ஆனால், ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் சேர்ந்து தனியாக வந்திருந்தார்.
அம்பானி வீட்டு திருமணம்:
இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சன் தன்னுடைய அப்பா, அம்மா சகோதரி உடன் தனியாக வந்திருந்தார்.
இருவருமே தனித்தனியாகத் தான் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இதனால் தான் மீண்டும் இவர்களின் விவாகரத்து சர்ச்சை புகைய ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். கூடிய விரைவிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சனுடன் மட்டும் சண்டை போடாமல் அவருடைய அம்மா, சகோதரி இடம் கூட சண்டை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் பிரிவிற்கு காரணம்:
இப்படி இருக்கும் நிலையில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பிரிவிற்கு காரணமான நடிகை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது. அதாவது, ஆனந்த் அம்பானி வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மாமியார் ஜெயாவை கூட கண்டு கொள்ளவில்லை. ஆனால், பழம்பெரும் பாலிவுட் நடிகை ரேகாவை சந்தித்து கட்டி தழுவி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இருவருமே காதுகளில் ரகசியம் பேசிக்கொண்டிருந்தார்கள். இது இவர்களுக்கு முதல் முறை இல்லை. ஏற்கனவே இவர்களுக்கு இடையே நல்ல உறவு இருக்கிறது.
ரேகா குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் ரேகா அவர்கள் அமிதாப் பச்சன் உடைய முன்னாள் காதலி. இதனாலேயே ரேகாவுக்கும் ஜெயாவுக்கும் இடையே சண்டை இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகை ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பது இவர்களுடைய குடும்ப பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பும் அமிதாபச்சன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ரேகா தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் இடையே விவாகரத்துக்கும் ரேகா தான் காரணமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.