பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை 2007 ஆண்டு ஐஸ்வர்யா ராய் அவர்கள் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் அவர்கள் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் முன்னாள் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
மும்பையில் மலாட் என்ற பகுதியில் 14-வது மாடியில் வசித்து வந்தார் திஷா ஷாலியன். இவர் நேற்று மாலை திடீரென்று 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திஷா ஷாலியன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
திஷா ஷாலியன் தற்கொலை குறித்த கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை செய்து கொண்ட திஷா ஷாலியன் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்று தெரிய வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் வருண் ஷர்மா, சுஷாத் போன்ற பல பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திஷா ஷாலியன் மறைவிற்கு ஐஸ்வர்யா ராய் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.