ஐஸ்வர்யா காருக்கு முன் குழந்தையுடன் சென்ற பெண்ணை அவமரியாதையாக போலீஸ் நடத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே சினிமா பிரபலங்கள் பொது இடங்களுக்கு வருகிறார்கள் என்றாலே மக்களின் கூட்டம் கடல் அலை போல் அதிகமாக இருக்கும். நிகழ்ச்சிகள், விழாக்கள், திறப்பு விழா என்று ஏதாவது ஒரு விழாவிற்கு பிரபலங்கள் வந்தால் அவர்களை காணவும், அவர்களுடன் புகைப்படம் எடுக்கவும் மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக தன் மகளுடன் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க மக்களின் கூட்டமும் சூழ்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராயின் காரை சுற்றி பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பின் போலீசும் எப்படியோ பொதுமக்களின் கூட்டத்தை கடந்து ஐஸ்வர்யா ராயை காரில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள்.
போலீஸ் செய்த வேலை:
அப்போது ஐஸ்வர்யா ராயை பார்க்க ஒரு பெண் கை குழந்தையுடன் கார் முன்னே சென்று இருக்கிறார்.
உடனே அங்கிருந்த போலீஸ் அந்த பெண்ணை அடிக்க கை ஓங்கி இருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அந்த காவல் காவல்துறை அதிகாரி செய்த செயலைக் கண்டித்தும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கமெண்ட் போட்டும் வருகிறார்கள்.
ஐஸ்வர்யா ராய் திரைப்பயணம்:
எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் இன்னும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் குறித்த தகவல்:
மேலும், இவர் 22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி ரோலில் மிரட்டி இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் விவாகரத்து:
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் உலவி வருகிறது.