மகளுடன் இருக்கும் புகைப்படத்தையே கொச்சைபடுத்திய நபர் – ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாகக் குவிந்த கமென்ட்டுகள்

0
581
aiswarya
- Advertisement -

அம்மாவின் அன்பை மதிப்பிடுவதை நிறுத்துங்கள் என்று ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாக ரசிகர்கள் பதிவிட்டுள்ள கமெண்ட்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. என்றென்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காத உலக அழகியாக இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய். இவர் 1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடகாவில் பிறந்தவர். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராய் குடும்பம்:

இருந்தாலும் இவர் பாலிவுட் படங்களில் தான் அதிகம் நடித்து இருக்கிறார். பின் இவர் 2007 ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பட்சன் தம்பதியருக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கின்றனர். ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு தேவதையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படம் சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா , ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் நந்தினி தேவி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராய் போஸ்ட்:

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பதிவிட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, இன்று ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் 11வது பிறந்தநாள். தற்போது இவர் தன்னுடைய 11 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய மகளின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில், ஐஸ்வர்யா தனது மகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் பெற்றிருக்கிறது. பின் அதில் அவர், எனது அன்பு, எனது வாழ்க்கை, ஐ லவ் யூ மை ஆராத்யா என்று குறிப்பிட்டு இருக்கிறார்

விமர்சிக்கும் ரசிகர்கள்:

இப்படி ஐஸ்வர்யா ராய் பதிவிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து
சிலர் விமர்சித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள்.அதிலும் ஒருவர் , `இது இந்திய கலாசாரம் கிடையாது, வெட்கமாக இருக்கிறது!’ என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், அம்மாவின் அன்பை மதிப்பிடுவதை நிறுத்துங்கள், அன்பு இருவருக்கும் இடையிலான பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய முத்தம். அதை இப்படி மோசமாக விமர்சிக்காதீர்கள், அன்பை பரப்புங்கள், பாசிட்டிவாக சிந்தியுங்கள் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement