அந்த நடிகருடன் நடிக்கவே அச்சமாக இருந்தது. ஓப்பனாக கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.

0
51245
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த கனா, நம்ம வீட்டு பிள்ளை படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதது. இதனை தொடர்ந்து இயக்குனர் நிர்மல் குமார் இயக்கும் படத்தில் நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் படத்தில் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து நடிக்க பயந்து உள்ளதாக பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் தேவர்கொண்ட நடிப்பில் உருவாகி வரும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் விஜய் தேவர்கொண்டாவுக்கு மனைவியாக நடித்து உள்ளார். இதில் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் கேட்டபோது அவர் கூறியது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் விஜய் தேவர்கொண்டா அற்புதமான அடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் அனைவர் மனதிலும் இடம் பிடிப்பார் என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. உண்மையில் விஜய் தேவர்கொண்டா மிகவும் நல்லவர், நேர்மையானவர்.

- Advertisement -

இதையும் பாருங்க : படு ரொமான்டிக்காக காதலை தெரிவித்துள்ள நடிகரின் காதலை ஏற்றுக்கொண்ட காதலி. யார் தெரியுமா ?

எனக்கு இந்த படத்தில் முதலில் நடிக்கும் போது அவர் மீது ஒரு சின்ன அச்சம் இருந்து கொண்டு இருந்தது நடிக்கவே பயந்தேன். ஆனால், நடிக்க ஆரம்பித்த போது தான் நான் அவரை பற்றி தெளிவாக புரிந்து கொண்டேன் என்று கூறினார். இயக்குனர் க்ரந்தி மாதவ் தான் இந்த படத்தின் கதை, வசனம் எழுத்தாளர் ஆவார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் இந்த படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரிய வந்து உள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் என்ற விஜய் தேவர்கொண்டா லவ்வர் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றார்கள். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக இருக்க போகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் பயங்கர எதிர்பார்ப்புகளுடன் உள்ளார்கள்.

Advertisement