இதெல்லாம் ஒரு பொழப்பா ? இந்தி தெரியாது போடா டி-ஷர்ட் அணிந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தி தெரியும் என்று சொன்ன வீடீயோவை பகிரும் நெட்டிசன்கள்.

0
1962
ayswarya
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது.

-விளம்பரம்-
Image

சமீபத்தில் கூட தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் கூட #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் கூட கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரெண்டிங்கில் வந்தது.

- Advertisement -

திமுக போன்ற பல்வேறு கட்சியினர் இந்த இந்தி எதிர்ப்பு பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து நடிகர் சாந்தனு, உதயநிதி, கிருஷ்ணா போன்ற பல பிரபலங்கள் அதே டீ -ஷர்ட்டை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டனர். அந்த வகையில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ்ஷும் அப்படி ஒரு டி-ஷர்ட்டை அணிந்து போஸ் கொடுத்து இருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு இந்தி பேசத் தெரியும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

அந்த குறிப்பிட்ட பேட்டியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்தி தெரியும் என்று அப்போது கூறிவிட்டு இப்போது இந்தி எதிர்ப்பை ஆதரிக்கும் வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாடகம் ஆடுகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement