3 படத்திற்கு கொலவெறி பாடலை குறை சொன்னது போல, லால் சலாம் பட தோல்விக்கு ரஜினியை காரணம் சொன்ன ஐஸ்வர்யா.

0
237
- Advertisement -

லால் சலாம் படத்தின் சொதப்பலுக்கு இதுதான் காரணம் என்று இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து இவர் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கினார். இதை அடுத்து இவர் 7 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின் லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் இவர் கம்பேக் கொடுத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரஜினி அவர்கள் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு கௌரவ புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் ரஜினி மகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவருமே சிறுவயதில் இருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் இருவருக்கும் சிறுவயதில் இருந்தேன் பகை இருந்து வருகிறது.

- Advertisement -

லால் சலாம் படம்:

அது கிரிக்கெட் மைதானமாக இருந்தாலும் சரி ஊரில் இருந்தாலும் சரி. மேலும், விஷ்ணு விஷாலின் கிராமத்தில் இந்துக்களும், விக்ராந்த் கிராமத்தில் முஸ்லிம்களும் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் ரஜினி ஆரம்பித்த த்ரீ ஸ்டார் கிரிக்கெட் குழுவில் விஷ்ணு விஷாலும் இணைந்து விளையாடுகிறார்கள். ஆனால், விஷ்ணு விஷால் மீது இருக்கும் வன்மத்தால் அவரை அந்த அணியில் இருந்து நீக்கிறார்கள். இதனால் இந்துக்கள் ஒரு டீம் ஆகவும் முஸ்லிம்கள் நிறைந்த ஆட்கள் ஒரு டீமாகவும் கிரிக்கெட் அணியை உருவாக்குகிறார்கள். இப்படி இரண்டு ஊர்கள் இரு வேறு மதத்தினர் அடங்கிய கிரிக்கெட் அணிகள்.

படத்தின் கதை:

அரசியல் ஆதாயத்திற்காக இவர்களுக்கு சண்டை மூட்டி ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஒற்றுமையை மொய்தீன் பாய் எப்படி உள்ளே புகுந்து பஞ்சாயத்து செய்து இரு ஊர்களையும் ஒன்றிணைக்கிறார் என்பதே படத்தின் கதை. அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லால் சலாம் படம் ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசூலும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லால் சலாம் படம் குறித்து வந்த விமர்சனத்திற்கு மனம் திறந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டி:

அதில் அவர், நான் லால் சலாம் கதை எழுதும் போது மொய்தீன் பாய் கதாபாத்திரத்தை வெறும் பத்து நிமிடம் அதாவது இடைவெளிக்கு பின் வரும் காட்சியில்தான் எழுதியிருந்தேன். அந்த கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் போது எங்களால் 10 நிமிடம் வைத்து எடுக்க முடியவில்லை. அதற்குப் பின் இரண்டாம் பாதி முழுவதும் ரஜினிகாந்த் வைத்து நகர்வது போல் கொடுத்தோம். படத்தை பார்க்கும்போது முதல் பாதியில் அவர் இல்லாததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரிலீஸ் செய்ய இரண்டு நாட்களுக்கு முன்னால் அவரை முதல் பாதியில் வைக்கலாம் என்று யோசித்து கரெக்ட் பண்ணி எடுத்தோம். ஆனால், உண்மையில் செந்தில் என்பவரை சுற்றி தான் கதை நகர வேண்டும்.

லால் சலாம் படத்தின் சொதப்பல் காரணம்:

மொய்தீன் பாய் கதாபாத்திரத்தை வெறும் கெஸ்ட் ரோகலாக தான் நினைத்து எழுதினேன். அதற்குப்பின் எடிட்டங்கை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. படத்தினுடைய கதை ஸ்ட்ராங்காக இருந்தாலும் ரஜினிகாந்த் என்பவரை முதல் பாதியில் கொண்டு வந்தால் தான் கதை எங்குமே நிற்கவில்லை. தலைவரை எப்போது காட்டுவீர்கள் என்பது போல் ஆகிவிட்டது. தலைவர் மேல் கதை ஓபன் ஆகி விட்டால் முடியும் வரை அவரே தான் கொண்டு போக வேண்டும். வேறு எதை காண்பித்தாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த விஷயத்தை நான் லால் சலாம் படத்தில் கற்றுக் கொண்டேன். என்ன நல்ல கதையாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் என்ற இமேஜ் அனைத்தையும் தூக்கிவிடும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement