கடந்த புத்தாண்டு ஒன்றாக சாப்பிட்டோம். தற்போது பிரிந்திருக்கிறோம். விக்ரம் பட நடிகரின் மனைவி உருக்கமான பதிவு.

0
1409
- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உயிர் மீதான பயத்தை இந்த கொரோனா வைரஸ் காட்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் கடைகள், போக்குவரத்துக்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸின் காரணமாக படப்பிடிப்புகளெல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

Got a mail earlier today from my dear friend & Director Blessy who is stuck in Jordan at the moment shooting his next…

Anto Antony ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಮಾರ್ಚ್ 25, 2020

இதனால் ஒரு சில நடிகர்கள் எல்லாம் ஆங்காங்கே படப்பிடிப்பு தளத்திலேயே மாட்டிக்கொண்டார்கள். அந்த வகையில் நடிகர் பிரித்திவிராஜ் அவர்கள் ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவனத்தில் மாட்டிக் கொண்டார். இயக்குனர் ப்ளெஸ்சி இயக்கத்தில் நடிகர் பிரிதிவிராஜ் மலையாளத்தில் நடித்து வரும் படம் அது ஜீவிதம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் நடந்து வந்தது. ஜோர்டானில் இருந்து இந்தியாவுக்கு எப்போது விமானம் இயக்கப்படும் என்றும் தெரியவில்லை.

- Advertisement -

இதனால் பல பேர் கவலையில் உள்ளார்கள். இந்நிலையில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் பிரித்திவிராஜ் மனைவி சுப்ரியா மேனன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த தினத்தன்று பிரித்திவிராஜ் அவர்கள் குடும்பம் மிகவும் மிஸ் பண்ணி இருக்கிறது. நான் பதிவிட்ட இந்த புகைப்படம் போன வருடம் புத்தாண்டு தினத்தின் போது எடுக்கப்பட்டது.

அப்போது நாங்கள் ஒரு அற்புதமான மதிய சாப்பாடு சாப்பிட்டோம். குடும்பத்துடன் அந்த நாள் முழுவதும் நாங்கள் சந்தோஷமாக கொண்டாடினோம். ஆனால், இந்த வருடம் பல குடும்பங்கள் தனித்தனியாக ஆயிரம் மைல்கள் கடந்து தவித்து வருகின்றது. கொரோனா காரணமாக என் கணவர் ஆயிரம் மைல்கள் கடந்து உள்ளார். எல்லோரையும் போலவே நாங்களும் பிரிந்துள்ளோம். அனைவரும் நம்பிக்கையோடு, கடவுளை வேண்டுவோம். கூடிய விரைவில் இந்த பிரச்சனை நீங்கும் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் மொழியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின் இவர் மலையாள மொழியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். நடிகர் பிரித்திவிராஜ் அவர்கள் சுப்ரியா மேனன் என்பவரை 2011 ஆம் ஆண்டு பாலக்காட்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. அவள் பெயர் (alankrita) அலன்கிர்தா.

Advertisement